a

“மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்” – ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது குறித்து சீமான் கருத்து!


ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவி வருவதால் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் காலையில் ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று வேதாந்தா நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தது.

அது குறித்து நேற்றைய முந்தைய தினம் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் விருப்பத்திற்காக மட்டுமே திறக்க வேண்டும் எனவும் மூன்று மாதங்கள் மட்டுமே அந்த அறையில் ஆக்சிடெண்ட் தயாரிக்க அனுமதி எனவும் அனைத்து கட்சிகள் சார்பிலும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

நேற்று அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு அந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் மத்திய அரசு தரப்பில் ஸ்டெர்லைட் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்கு தர முடியாது எனவும் மத்திய அரசுக்கு கிடைத்த பின்னர் தான் மாநிலங்களில் தட்டுப்பாடு குறித்து அறிந்த பின்னர் பிரித்து வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

Also Read  CBSE பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் புரோஹிதர் போல் சித்தரிப்பு! - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. ஜூலை 31-ஆம் தேதி வரை மட்டுமே ஸ்டெர்லைட் அதில் ஆக்ஸிஜன் தயாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதே மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் என்று தெரிவித்துள்ளார்.

Also Read  மூன்றாவது பேரியக்கமாக கம்பீரமாக நிற்கிறோம் - சீமான்

மேலும் மன்னிக்கவே முடியாத இது போன்ற பெரும் துரோகம் செய்த திமுக மற்றும் அதிமுக விற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெயலலிதா நினைவிடம் மூடல்; சசிகலாவுக்கு செக் வைக்கும் எடப்பாடி பழனிசாமி!

Tamil Mint

தேவாங்கர் செட்டியார் சங்கக் கூட்டம் – ஓ.பி.எஸ்.ஸூக்கு ஆதரவு திரட்டிய மகன்…!

Devaraj

தமிழக அமைச்சரவையில் டெல்டா மாவட்டத்தினருக்கு வாய்ப்பு இல்லை…!

Lekha Shree

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் விவரம் இதோ…!

Devaraj

பட்ஜெட் உரையை தொடங்கினார் ஓபிஎஸ் – வெளிநடப்பு செய்த திமுக

Devaraj

ஒவ்வொரு வீட்டினருக்கும் ஹெலிகாப்டர்!! சுயேட்சை வேட்பாளரின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்..

HariHara Suthan

“ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் திமுக தான்!” – முதல்வர் பழனிசாமி

Lekha Shree

“பகல் வேஷம் போடும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கடவுள் தேர்தல் மூலம் தண்டனை கொடுப்பார்” – முதல்வர் பழனிசாமி

Tamil Mint

நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

Devaraj

கணீர் குரலில் விஜயகாந்த் பிரச்சாரம்! – புதிய யுக்தியை கையாளும் தேமுதிக!

Lekha Shree

“பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வாய்ப்பே இல்லை!” – அமைச்சர் பாண்டியராஜன்

Shanmugapriya

“தைரியம் இருந்தால் மேற்கு வங்க தேர்தலில் அமித்ஷா போட்டியிடட்டும்” – மம்தா பானர்ஜி சவால்

Tamil Mint