சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா? – ஸ்டாலினிடம் சீமான் கேள்வி


திமுக ஆட்சி அமைத்த 100 நாட்களில் தமிழகத்தின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என கடிதங்களாக பெற்ற பெட்டிகள் தொலைந்துவிட்டதா என திமுக அரசை விமர்சித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற, நிகழ்ச்சியை நடத்திய ஸ்டாலின், ஒவ்வொரு தொகுதி மக்களிடமும் மனுக்கள் பெற்றார்.

Also Read  நாளை முதல் ரேசனில் மளிகை தொகுப்பு வினியோகம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த மனுக்கள், 100 நாட்களுக்குள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு தீர்வு காணப்படும் என அறிவித்தார்.

அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், பொது மக்கள் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு காண, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற துறையை உருவாக்கினார்.

அதன் சிறப்பு அலுவலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்து 50 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read  முல்லைப்பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாக உள்ளது

இது குறித்த டுவிட்டர் பதிவில், திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து என்றும் தமிழகத்தின் அத்தனைப் பிரச்னைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

50 நாட்களைக் கடந்தும் பாதி காலக்கெடு முடிந்துவிட்டது என தெரிவித்துள்ள அவர், என்னவானது தமிழகத்தின் பிரச்னைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே! என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

Also Read  பி.எப்., புகார்கள், சந்தேகங்களை வாட்ஸ்அப்பில் கேட்கலாம்: புதிய வசதி!

மக்களின் பிரச்னைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா? என்றும் அவர் வினாவி உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக செயற்குழு- எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் வருகை

Tamil Mint

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

Tamil Mint

பொதுத் துறையான போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க தமிழக அரசு திட்டமா?

Tamil Mint

‘நிழல் இல்லா நாள்’ – ஓர் அறிவியல் நிகழ்வு!

Lekha Shree

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்!

Lekha Shree

திருவள்ளுவரை புகழ்ந்த பிரதமர் மோடி… முதலமைச்சர் எடப்பாடியின் ட்வீட் இதோ!

Tamil Mint

கோவில்பட்டியில் போட்டியிடும் டிடிவி – அமமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Lekha Shree

சசிகலா விரைவில் குணமடைய வேண்டும்- பாஜக தலைவர் முருகன்

Tamil Mint

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அனல்காற்று வீசக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழக்கு:

Tamil Mint

கனமழை: அணையை திறக்க முதல்வர் உத்தரவு

Tamil Mint

சென்னை: 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த கனமழை!

Lekha Shree