“சூர்யாவை மிரட்டினால் அவ்வளவு தான்” – பாஜகவை எச்சரித்த சீமான்!


நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக, தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட வரைவுக்கு கண்டனம் தெரிவித்த ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சூர்யாவை தொடர்ந்து கார்த்தி, விஷால், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், ராஜூமுருகன், பூச்சி முருகன், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ உள்பட பலர் புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

Also Read  சட்டப்பேரவைக்குள் நுழையும் 234 பேர்களில் 12 பேர் மட்டுமே பெண்கள்…!

ஏற்கனவே நடிகர் சூர்யா மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை, நீட்தேர்வு உள்பட பல திட்டங்களுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் நீட்தேர்வு மற்றும் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட வரைவு ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியது.

Also Read  'தளபதி 65' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த மாஸ் அப்டேட்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்நிலையில், அவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக, தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

Devaraj

“நாம் தமிழர் கட்சியை நான் தமிழர் கட்சியாக மாற்றி விட்டார் சீமான்” – சுப. உதயகுமார்

Shanmugapriya

ஹாலிவுட் நடிகரைப் பார்த்து காப்பி அடிக்கிறார விஜய்?

Tamil Mint

கடலில் மிதந்தபடி திமுகவுக்கு வாக்கு சேகரித்த மதிமுகவினர்!

Shanmugapriya

“தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது” – முதல்வர் பழனிசாமி

Shanmugapriya

சொன்னபடி திரையில் கர்ணன் காட்சியளிப்பான்…. தயாரிப்பாளர் ட்விட்…

VIGNESH PERUMAL

ஷூட்டிங்கில் ஜன கன மன… புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய ஜெயம் ரவி!

Bhuvaneshwari Velmurugan

ஆளுங்கட்சி அமைச்சர்கள் மீது ஊழல் புகார்: நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு!

Tamil Mint

செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்: எதற்கு தெரியுமா?

Tamil Mint

வணக்கம் சொன்ன உதயநிதி.. கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி…

Ramya Tamil

“நான் தினமும் மாட்டு சிறு நீரை குடிக்கிறேன்” – பாஜக எம்பி சர்ச்சை பேச்சு

Shanmugapriya

“வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, வாஷிங் மெஷின் இலவசம்” – அதிமுக தேர்தல் அறிக்கை

Shanmugapriya