“ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு!” – விஜய்க்கு ஆதரவாக குரலெழுப்பிய சீமான்..!


பாஜகவின் ஆட்சி முறையை திரைப்படங்களில் சாடியதற்காகவே காழ்ப்புணர்ச்சி கொண்டு தொடர்ச்சியாக அவரை நோக்கிப் பாய்வது முழுக்க முழுக்க அரசியல் வன்மத்தின் வெளிப்பாடாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் அவரது மனுவை தள்ளுபடி செய்ததோடு விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தார்.

மேலும், “நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்கவேண்டும். சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது.

சமூக நீதிக்காகப் பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல. நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு” என கருத்து தெரிவித்தார்.

இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆக வரி கட்டுங்க விஜய் மற்றும் வரி ஏய்ப்பு விஜய் போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி ட்ரெண்ட் ஆனது. இதனிடையே விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

Also Read  பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62,000 கடன் சுமை – பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் எம்.பி., காயத்ரி ரகுராம் ஏற்கனவே லூராள் கொடுத்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் அன்புத் தம்பி விஜய் அவர்கள் 2012ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து வாங்கிய மகிழுந்துக்கு செலுத்த வேண்டிய நுழைவு வரியிலிருந்து விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக அவரை வசைப்பாடுவதும் பழிவாங்கும் நோக்கோடு அவதூறு பரப்புவதும் ஏற்புடையது அல்ல.

Also Read  சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்…! அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது தம்பி விஜய் வரி விலக்குக்காக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தானே தவிர வரி ஏய்ப்பு செய்துவிட்டார் என்பதல்ல. ஆனால் தீர்ப்பு வந்தது முதல் தம்பி விஜய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதைப் போல ஒரு போலியான கருத்துருவாக்கம் செய்து வலதுசாரி கும்பல் அவரை குறிவைத்து தாக்க முற்படுவது கண்டனத்திற்குரியது.

தம்பி விஜய் தொடர்ந்து முறையாக வரி செலுத்தி வரும் நிலையிலும் அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு கடந்த ஆண்டு அவருடைய வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

அவர் வரி ஏய்ப்பு செய்ததாக எவ்வித ஆவணங்களும் அப்போது வெளியிடப்படவில்லை. அவர் மீது எந்த ஒரு வழக்கு தொடரப்படவில்லை. அவரை அச்சுறுத்தி மிரட்டி பணியவைக்கவும் இனி எவரும் திரைத்துறையில் இருந்து மோடி அரசுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடாது என்பதற்காகவும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது என்பதை நாடறியும்.

Also Read  சூர்யா பட நடிகை திடீர் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்!

சோதனைகளின் போது விஜய் மீது எவ்வித குற்றச்சாட்டை முன்வைக்க முடியவில்லை என்ற போதிலும் பாஜகவின் ஆட்சி முறையை திரைப்படங்களில் சாடியதற்காகவே காழ்புணர்ச்சி கொண்டு தொடர்ச்சியாக அவரை நோக்கிப் பாய்வது அவருக்கு எதிராக பொய்களை கட்டவிழ்த்து விடுவது முழுக்க முழுக்க அரசியல் வன்மத்தின் வெளிப்பாடாய் ஆகும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று தன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல, தம்பி விஜய் மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வர வேண்டுமென எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணையும் விஜய்சேதுபதி-தமன்னா…! வெளியான ப்ரமோ சூட் போட்டோ…!

sathya suganthi

தலைமை செயலக வடிவில் கேக்.. திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக ஆதரவாளர்..

Ramya Tamil

கிங்காங்கை விஜய்யுடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட நெட்டிசன்கள்! வைரல் வீடியோ இதோ!

HariHara Suthan

போராட்ட வழக்குகள் வாபஸ் – சட்டசபையை அசர வைத்த மு.க.ஸ்டாலின் உரை…!

sathya suganthi

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன்

Tamil Mint

விரைவில் உருவாகும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் 2ம் பாகம்?

Lekha Shree

நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… பிரபல சீரியல் நடிகர் கைது!

Lekha Shree

நடிகர் ஜூனியர் என்.டி. ஆருக்கு கொரோனா…!

Lekha Shree

‘திரெளபதியின் முத்தம்’… கர்ணன் படத்தின் 3வது சிங்கிள் இன்று ரிலீஸ்…!

malar

செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு..!

Lekha Shree

லட்சத்தீவு விவகாரம் – நடிகை மீது தேசத்துரோக வழக்கு!

Lekha Shree

இணையத்தில் பகிரப்படும் குக் வித் கோமாளி நட்சத்திரங்களின் சம்பள விவரம்! – யாருக்கு அதிகம் தெரியுமா?

Shanmugapriya