“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – செல்லூர் ராஜு


ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள், தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறுகையில், “மாணவ சமுதாயத்தை ஏமாற்றும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறியவர்கள் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Also Read  வசந்தகுமார் காலமானார்

அதிமுக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சிறந்த திட்டம். ஆனால் அதனை இந்த அரசு பொருட்படுத்தவில்லை. அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் தொடருமா என்ற கேள்விகள் மாணவர்களிடம் உள்ளது.

மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் அணில் விவகாரம் குறித்த கேட்ட கேள்விக்கு செல்லூர் ராஜு, “நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். தெர்மாகோல் விட்டதற்காக என்னை நவீன விஞ்ஞானி என்று திமுகவினர் கிண்டல் செய்தார்கள்.

Also Read  தமிழகத்தில் இனி மின் தடை இருக்காது - அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

இப்போது என்னை மிஞ்சி அணிலை கண்டுபிடித்துள்ளார். எங்கள் ஆட்சியில் அணில் எல்லாம் வெளிநாடுகளுக்கு சென்று விட்டது போல.

இந்த ஆட்சியில்தான் அணில் மின் கம்பியில் போகிறது. இதை கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என கூறினார்.

Also Read  16 நாட்களில் 51.81% உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…! அச்சத்தில் தமிழக அரசு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாமக மீது நடவடிக்கை கோரி மனு

Tamil Mint

புதுச்சேரி முதலமைச்சருக்கு கொரோனா…! தள்ளிப்போகும் அமைச்சரவை பதவியேற்பு…!

sathya suganthi

இன்றைய தலைப்புச் செய்திகள் | 01.06.2021

sathya suganthi

இன்று முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

Tamil Mint

பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை…! முழு விவரம் இதோ…!

sathya suganthi

“ஊரடங்கு தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்..” ஸ்டாலின் பேச்சு

Ramya Tamil

காரை பின் தொடர்ந்த இளைஞரோடு செல்பி எடுத்த சசிகலா!- வைரலாகும் போட்டோ

Tamil Mint

திமுக வெற்றிக்கு உழைக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – தொண்டர்களை எச்சரித்த ஸ்டாலின்!

Devaraj

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்…!

Lekha Shree

மே 1 முழு ஊரடங்கு தேவையில்லை – தமிழக அரசு

Devaraj

நான் எச்சரித்திருக்காவிட்டால் அண்ணா பல்கலைக்கழகம் இல்லாமல் போயிருக்கும்: ஸ்டாலின்

Tamil Mint

இது தேவையா? – போதைக்காக தின்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து இறப்பு!

Shanmugapriya