”டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படை தன்மையுடன் நடந்தது” – அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்.!


தன் வீட்டின் முன்பு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் மதுவிலக்கு துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பார் உரிமையாளர்கள் போராட்டம்

இந்தப் போராட்டம் அரசின் விதிகளை பின்பற்றி டாஸ்மாக் பார்களில் டெண்டர் நடப்பதில்லை என குற்றம்சாட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார் உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read  செப்டம்பர் முதல் பள்ளிகள் திறப்பு? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தபோது, “தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டர் ஒளிவுமறைவின்றி வெளிப்படை தன்மையுடன் நடந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தின் மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் டெண்டர் பற்றிய முக்கிய அறிவிப்புகளை கூறி வருகிறார். அதன்படி 2019 ஆம் ஆண்டில் 6482 டெண்டர்கள் மட்டுமே பெறப்பட்டன என்று கூறினார். இந்த ஆண்டு வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதால் இதுவரை 11715 டெண்டர்கள் பெறப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர்கள் கோரப்பட்டு உள்ளன என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

Also Read  டாஸ்மாக் திறப்பு ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

டெண்டர்கள் எடுப்பவர்கள் ஆன்லைனிலும் நேரிலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். கடந்த ஆட்சியில் முறைகேடாக சில பார்கள் ஒதுக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என்றும் கூறினார்.

அனைத்து விண்ணப்பங்களையும் முழுமையாக ஆய்வு செய்துதான் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார். கடந்த ஆட்சியின் போது இருந்த அதே விதிகளை பின்பற்றி தான் இந்த ஆட்சியும் டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் கோரப்பட்டு உள்ளன என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

Also Read  பாலியல் தொல்லை வழக்கு: நர்சிங் கல்லூரி தாளாளர் நீதிமன்றத்தில் சரண்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ஜெய் பீம்’ விவகாரம்: சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு…! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!

Lekha Shree

மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு உடனடியாக வேலை வழங்கி உதவிய முதல்வர்

Tamil Mint

முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..

Ramya Tamil

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை வரவேற்கிறோம்” – அண்ணாமலை

Lekha Shree

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு:

Tamil Mint

தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Tamil Mint

ரஜினி எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Tamil Mint

கொரோனா அப்டேட் – சென்னையை மிஞ்சிய கோவை..!

Lekha Shree

சென்னையில் ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை: அமைச்சர் எச்சரிக்கை..!

suma lekha

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியீடு

Tamil Mint

“போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க நடவடிக்கை” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Lekha Shree