படகில் போட்டோஷூட் நடத்திய நடிகை கைது…!


பள்ளியோடம் படகில் ஜீன்ஸ் மற்றும் ஷூ அணிந்து போட்டோஷூட் நடத்தியதற்காக கேரளாவின் பிரபல சீரியல் நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல மலையாள சீரியல் நடிகை நிமிஷா பிஜோ, சோஷியல் மீடியாவில் பிரபலமாக உள்ளவர். இவர் தனது நண்பர் உன்னி என்பவருடன் இணைந்து சில தினங்களுக்கு முன்பு படகில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

Also Read  ஐந்து நிமிட இடைவெளியில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்! வெளியான பகீர் தகவல்!

பள்ளியோடத்தில் நின்று ஜீன்ஸ் மற்றும் ஷூ அணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அதை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த பாம்பு வடிவ படகுகள் கோயில்களுக்கு சொந்தமானவை. இதை விழாக்காலங்களில் மட்டுமே கேரளாவில் பயன்படுத்துவது வழக்கம்.

நடிகை நிமிஷா பயன்படுத்தியது அரன் முலா பார்த்தசாரதி கோவிலுக்கு சொந்தமான படகு. இந்த படகு பத்தினம்திட்டாவிலுள்ள பம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின்போது பயன்படுத்தப்படுவது.

இந்த வகை படகுகளை கேரளாவில் புனிதமாக பார்க்கிறார்கள். இதில் ஏறும் முன் பூஜை செய்ய வேண்டும் என்றும் வேஷ்டி முண்டு அணிந்து ஏற வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

Also Read  போலீஸ் விசாரணை வளையத்தில் நடிகர் சுரேஷ் கோபி…!

ஆனால் இந்த படகில் நடிகை நிமிஷா ஜீன்ஸ் மற்றும் ஷூ அணிந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்ததை அடுத்து கோயில் தேவஸ்தானம் நடிகை மீது புகார் அளித்துள்ளது.

அதை அடுத்து நிமிஷா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக பேசிய நிமிஷா தனக்கு முன்னதாக கொலை மிரட்டல் வந்ததாக தெரிவித்துள்ளார்.

Also Read  கேரள மாணவர்கள் நடன வீடியோ! இந்து முஸ்லிம் பிரச்சனை எழுப்பிய சிலர்! பதிலடி கொடுத்த சேட்டன்கள்!

இந்த சம்பவம் கேரளாவில் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை ராஷ்மிகா தனது அப்பாவுடன் உள்ள கியூட் புகைப்படம்! இணையத்தில் வைரல்..

HariHara Suthan

விரைவில் உருவாகும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் 2ம் பாகம்?

Lekha Shree

144 தடை உத்தரவு – சாரை சாரையாக வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்..!

Lekha Shree

திருப்பதி: இலவச டோக்கன் விநியோகத்தால் குவியும் பக்தர்கள்… திணறும் தேவஸ்தானம்..!

Lekha Shree

சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ திரைப்படம்: தயாரிப்பு நிறுவனம் தந்த புதிய அப்டேட்!

suma lekha

மருத்துவரை காக்க நிதி திரட்டிய மக்கள்; தகவல் அறிந்து நிதி ஒதுக்கிய ஆந்திர முதல்வர்!

Shanmugapriya

ஒரே ஒரு தங்கப்பதக்கத்தால் உலகத் தரவரிசையில் உச்சத்திற்கு சென்ற நீரஜ் சோப்ரா…!

Lekha Shree

எப்போதில் இருந்து வழக்கமாக ரயில் சேவை – ரயில்வே அதிகாரி தந்த அப்டேட்…!

Devaraj

அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘தேஜாவு’ மற்றும் ‘டி பிளாக்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

Lekha Shree

2 ஆண்டுகளுக்கு இலவச அழைப்பு… மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ஜியோ!

Shanmugapriya

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கும் படம் – இவர் தான் ஹீரோ…!

sathya suganthi

ராம்சரணுக்காக 231 கிலோ மீட்டர் நடந்த ரசிகர்!

Shanmugapriya