“நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலக இதுதான் காரணம்!” – உண்மையை போட்டுடைத்த ரச்சிதா!


பிரபல சீரியல் நடிகை ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகியதை குறிப்பிடும் வகையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் “BYE MAHA” என பதிவிட்டிருந்தார்.

இதனால், அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே இதுகுறித்த செய்திகள் இணையத்தில் உலா வர தொடங்கின.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’.

இதில், மிர்ச்சி செந்தில் மற்றும் ரச்சிதா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மகா-மாயன் ஜோடிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்த சீரியலின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.

Also Read  'பிக்பாஸ்' சீசன் 5-ல் பங்கேற்கும் 'டிக்டாக்' பிரபலம் ஜி.பி.முத்து? வைரலாகும் புகைப்படம்..!

இந்நிலையில் தான் ரச்சிதா இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. அவர் ஒரு கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதால் சீரியலில் இருந்து விலகுகிறார் என கூறப்பட்டது.

ஆனால், இதுகுறித்து எந்த விளக்கமும் தராமல் இருந்தார் ரச்சிதா. இதனால் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு விடையளிப்பது போல அமைந்துள்ளது அவரது இந்த பதிவு.

Also Read  இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவர்தான்? வெளியான அப்டேட்..!

இதுகுறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள ரச்சிதா, “படவாய்ப்புகள் வந்ததால் நான் சீரியலில் இருந்து விலகவில்லை.

என்னுடைய Professionalism குறித்து நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அனைவருக்கும் என்னுடைய அர்ப்பணிப்பு குறித்து தெரியும். ஒரு ப்ராஜெக்ட் வந்தால் அதில் என்னுடைய இன்புட்ஸ் எப்படி இருக்கும் என்பது குறித்து நான் சொல்ல வேண்டியதில்லை.

Also Read  விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது மாஸ்டர் திரைப்படம்!

சீரியல் டீம்மில் இருக்கும் அனைவரும் ரொம்ப Friendly. நான் சீரியலில் இருந்து விலக காரணம் அந்த கதையின் போக்கு. அது எனக்கு செட் ஆகவில்லை.

மற்றபடி பெரிய ப்ரோஜெக்ட்டுகளுக்காக நான் சீரியலை விட்டு விலகவில்லை” என தான் சீரியலை விட்டு விலகியதன் உண்மை காரணத்தை கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் டி.வி. தொகுப்பாளரின் மனைவியுடன் விஜே சித்ரா… ரசிகர்களை கலங்க வைக்கும் போட்டோ…!

HariHara Suthan

ஓடிடி தளத்தில் வெளியாகும் “அனபெல் சேதுபதி”: ரிலீஸ் தேதி தெரியுமா.?

mani maran

மலையாள திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் காலமானார்

Tamil Mint

சிறந்த துணை நடிகை விருது வென்ற மஹிமா நம்பியார்..! எந்த படத்திற்காக தெரியுமா?

Lekha Shree

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி?

Lekha Shree

15 வருடங்களுக்கு பிறகு இந்த வேடத்தில் நடிக்கும் ‘உலகநாயகன்’! வெளியான ‘விக்ரம்’ பட அப்டேட்!

Lekha Shree

தமிழகத்தில் முழு ஊரடங்கு: நடிகர் சித்தார்த் வரவேற்பு!

Shanmugapriya

கமல்ஹாசனுடன் இணைவது குறித்து ஹாட் தகவலை தந்த விஜய்சேதுபதி…!

Devaraj

சூர்யா படத்தில் கார்த்தி : வெளியான கலக்கல் அறிவிப்பு

suma lekha

சேலையில் கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் பிரபலம்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Lekha Shree

மெட்ரோவில் Me Too… லஷ்மிமேனன் வெளியிட்ட வீடியோ..!

suma lekha

ரீ-எண்ட்ரி கொடுத்த எருமசாணி ஹரிஜா-விஜய்..!

suma lekha