“நான் தான் கடைசியாக இருக்க வேண்டும்!” – பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை..!


பாலியல் வன்கொடுமை காரணமாக  மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Also Read  வேலூர்: கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகர்… தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து..!

இந்நிலையில், மாணவி எழுதியுள்ள கடிதம் ஒன்று சிக்கி இருக்கிறது. அதில் பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 “ இந்த பூமியில் வாழணும் ஆசபட்டேன். ஆனா இப்போ பாதியிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைத்தால் நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணனும்னு ஆசை. ஆனா முடியாதுல்ல “ என்று உருக்கமாக கூறியுள்ளார் அந்த மாணவி.   

தனது தாய், சித்தப்பா, மாமா ஆகியோரை மிகவும் பிடிக்கும் என்றும், யாருக்கிட்டயும் சொல்லாம போகிறேன்,என்னை மன்னித்து விடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

Also Read  தமிழகத்தில் ஒரே நாளில் 1,562 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.!

சில தினங்களுக்கு முன்பு கோவையில் பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், மேலும் ஒரு மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read  பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை கொன்ற தாய்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெள்ளி வென்ற ‘தங்கமகன்’ மாரியப்பனை வாழ்த்திய திமுக எம்.பி. கனிமொழி..!

Lekha Shree

காந்தியைப் போல் நேதாஜி படமும் ரூபாய் நோட்டில் வருமா?

Tamil Mint

கொரோனா குறித்த தமிழக தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்: இன்று புதிதாக 1,573 பேருக்கு கொரோனா தொற்று!

suma lekha

சுயநினைவின்றி சாலையில் கிடந்த நபர்… தோளில் தூக்கிச் சென்று உதவிய பெண் காவல் ஆய்வாளர்!

Lekha Shree

தமிழ் வழி கல்வி பயின்றோருக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: தமிழக அரசு அரசாணை வெளியீடு

suma lekha

தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷுக்கு கொரோனா தொற்று…!

Lekha Shree

பழங்குடியின மக்களுக்காக போராடிய ஸ்டேன் சுவாமி காலமானார்!

Lekha Shree

மதிமுகவில் இருந்து விலகிய மாநில இளைஞரணி செயலாளர்…! துரை வைகோவின் நியமனம் காரணமா?

Lekha Shree

நான் மட்டுமே கருணாநிதியின் மகன் அல்ல: ஸ்டாலின் உருக்கமான பேச்சு

Tamil Mint

‘ஜெய் பீம்’ விவகாரம்: சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு…! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!

Lekha Shree

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது!

Lekha Shree