‘நூதன நிபந்தனை..!’ – பாலியல் வழக்கில் சிக்கிய நபருக்கு நீதிபதியின் புதுமையான உத்தரவு..!


பீகார் மாநிலத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய நபருக்கு நீதிபதி நூதன நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மஜோர் கிராமத்தை சேர்ந்த லாலன்குமார் (20) அந்த கிராமத்தில் சலவை தொழில் செய்து வருகிறார்.

இவர் கடந்த ஏப்ரல் மாதம், அவரது கிராமத்தை சேர்ந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் லாலன் குமார் தனக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டார்.

Also Read  வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு; 144-வது நாளாக தொடரும் போராட்டம்

அவரது ஜாமீன் மனுவில் பெண்கள் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்த, “எனது தொழில் ரீதியாக பெண்களுக்கு சமூக சேவை செய்ய தயாராக இருக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஜாமீன் மனுவை விசாரித்த ஜஞ்சர்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அவினாஷ் குமார், 6 மாத காலத்திற்கு கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் துணிகளையும் சொந்த செலவில் துவைத்து சலவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் லாலன் குமாருக்கு ஜாமீன் வழங்கி உள்ளார்.

Also Read  "படிக்காமல் ஏன் பார்வோர்ட் செய்தீர்கள்?" - நடிகர் எஸ்.வி.சேகரிடம் நீதிபதி சரமாரி கேள்வி..!

இந்த நிபந்தனையை அறிந்து கிராமத்திலுள்ள அனைத்து பெண்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற உத்தரவு “வரலாற்று சிறப்புமிக்கது”, “இது பெண்கள் மீதான மரியாதை அதிகரிக்கும்” என்று கூறுகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹரித்வார் கும்பமேளா : 3 மாத திருவிழா ஒரு மாதமாக குறைப்பு

Devaraj

கொரோனா சிகிச்சைக்கு தடுப்பு மருந்தால் பயன் இல்லையா?

Tamil Mint

கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் சாலையின் இருபுறத்தையும் முடக்குவோம்: டெல்லியில் போராடும் விவசாயிகள்

Tamil Mint

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint

கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.. இன்று பதவியேற்பு விழா!

suma lekha

கோவாக்சின் தடுப்பூசியால் இந்தியர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல்?

sathya suganthi

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இதுவரை வசூலான நன்கொடை குறித்த விவரம் வெளியீடு!

Shanmugapriya

சேமிப்பு தாரர்களுக்கு நிர்மலா சீதாராம் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி…!

Devaraj

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கு பக்கவிளைவு – அசால்ட்டாக 2வது டோஸ் போடுக்கொண்ட மோடி…!

Devaraj

280 நிறுவனங்கள் திவால்…! – மத்திய அமைச்சர் தகவல்

Devaraj

தூக்கத்தில் சுவாசப் பிரச்சனையா…? கொரோனாவால் ஆபத்து…! மருத்துவ ஆய்வில் தகவல்…!

Devaraj

பப்ஜி மதன்… பிட்காயின்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!

Lekha Shree