”உன்னால ஒலிம்பிக்ல கலந்துக்க முடியுமா? உனக்கு வெக்காம இல்ல”.. சித்தார்த்தை வெளுத்து வாங்கும் ஷகிலா..!


சாய்னா குறித்து சர்ச்சை கருத்து தற்போது அடங்கியுள்ளதால், நிம்மதியாக உள்ள நடிகர் சித்தார்த்தை மீண்டும் வம்பிழுக்கு இழுத்த நடிகை ஷகிலாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆக்டிவாக இயங்கி வரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்களில் முக்கியமானவர்கள் நடிகர் சித்தார்த்.

தான் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி அரசியல் ரீதியான கருத்துக்களையும் துணிச்சலாக வெளியிட்டு வருபவர். ஆனால், இதனால் சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு.

அந்த வகையில் புதிய சர்ச்சை ஒன்றில் அண்மையில் சிக்கினார் நடிகர் சித்தார்த். கடந்த 5ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக அங்கு சென்றபோது, வழியில் விவசாயிகளின் போராட்டத்தால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக மீண்டும் டெல்லி திரும்பினார்.

Also Read  அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் கமல்ஹாசன்-லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்'?

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “எந்த ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால் அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலை வன்மையான வார்த்தைகளால் நான் கண்டிக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

சாய்னாவின் இந்த பதிவை டேக் செய்த சித்தார்த், சர்ச்சைக்குரிய வகையில் பொருள் கொள்ளும்படி பதில் பதிவிட்டிருந்ததாக அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழத்தொடங்கின.

நடிகர் சித்தார்த்தின் கருத்து பெண்களை மிகவும் இழிவுப்படுத்துவதாக இருப்பதாக எழுந்த எதிர்ப்புகளை அடுத்து பாடகி சின்மயி, நடிகை குஷ்பு, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் சர்மா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

எதிர்ப்புகள் அதிகரித்து வந்த நிலையில் நடிகர் சித்தார்த், “நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவ்வளவுதான். தவறான நோக்கத்தில் நான் எதுவும் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிற்காக மட்டுமே அந்த வார்த்தையை உபயோகித்தேன்” என்று விளக்கம் அளித்தார்.

Also Read  "நமது வீரத்தை பறைசாற்றும் சின்னம்" - வெளியானது 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் லுக்…!
This image has an empty alt attribute; its file name is image-61.png

இதற்கு சாய்னா நேவால், ”சித்தார்த் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி. முதலில் என்னை பற்றி ஏதோ சொன்னார். பிறகு மன்னிப்பு கேட்டார். சித்தார்த் கூறியது ஏன் வைரலானது என எனக்கே தெரியவில்லை ட்விட்டரில் நான் ஏன் வைரலானேன் என்றும் தெரியவில்லை. அதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். சித்தார்த்தின் இந்த விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு பெண்ணை இவ்வாறு குறிவைத்து தாக்கக்கூடாது. பெண்களை இது போன்று வசைபாடக்கூடாது. ஆனால் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்நிலையில், சித்தார்த்தின் சர்ச்சை கருத்திற்கு தற்போது வரை பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஷகீலா தன் பங்கிற்கு சித்தார்த்தை வெளுத்து வாங்கி இருக்கிறார். அதில் ‘உனக்கு வேற வேலை வெட்டி கிடையாதா நீ ஹீரோவாக நடிக்கிறேன் ஆனால் நீ ஹீரோ கிடையாது உன்னால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியுமா ? உனக்கு வெக்காம இல்ல.’ என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read  குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவர் தான்! குவியும் வாழ்த்து...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்டர்நெட்டில் லீக் ஆன மாஸ்டர் திரைப்பட காட்சி… சோனி நிறுவன ஊழியர் மீது புகார்!!

Tamil Mint

மீண்டும் டாப் 10 சுரேஷ்… ஆனால் இந்த முறை நெட்ப்ளிக்ஸில்..!

suma lekha

நடிகர் சோனு சூட்டிற்கு கிடைத்துள்ள வித்தியாசமான கவுரவம்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Lekha Shree

ராகவா லாரன்ஸ் பட கதாநாயகி தற்கொலை…!

suma lekha

‘தளபதி 65’ படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரம் இது தானா? இணையத்தில் பரவும் தகவல்!

Lekha Shree

‘வலிமை அப்டேட்’: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை கொண்டாட்டம்?

Lekha Shree

கர்ணன் முதல் பாதி மட்டும் 10 அசுரனிற்க்கு சமம்! இணையத்தில் தெறிக்கும் கர்ணன் பட விமர்சனம்

Jaya Thilagan

திரைக்கு வருகிறான் கர்ணன்….. டீசர் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு…

VIGNESH PERUMAL

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா? வெளியான அசத்தல் அப்டேட்..!

Lekha Shree

தளபதியின் ‘பீஸ்ட்’ அப்டேட்… செல்வராகவன் நடிக்கும் கதாபாத்திரம் லீக்..!

suma lekha

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

Devaraj

மருத்துவமனையில் சமந்தா? உண்மையை போட்டு உடைத்த மானேஜர்…

suma lekha