சோயிப் அக்தரை லைவ் ஷோவிலிருந்து வெளியேற சொன்ன தொகுப்பாளர்..! வைரலாகும் வீடியோ..!


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். இவர் பாகிஸ்தான் தேசிய ஊடகமான பிடிவியில் லைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பேசுபொருளாக மாறியுள்ளது.

நேற்று டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இதுகுறித்து பாகிஸ்தான் தேசிய ஊடகமான பிடிவியில் லைவ் ஷோவில் பேசிக்கொண்டிருந்தார் சோயிப் அக்தர்.

அந்நிகழ்ச்சியில், அவருடன் கிரிக்கெட் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மேலும், ஜாம்பவான்களான விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் டேவிட் கோவர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நவுமன் நியாஸ் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் ஒரு தமிழன்!

அப்போது நவுமன் சோயிப் அக்தரிடம் நியூசிலாந்துடனான போட்டி குறித்த கேள்வி ஒன்றை எழுப்பினார். அந்த கேள்விக்கு பதிலாக போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளர் ஹரிஷ் குறித்து புகழ்ந்து பேசினார்.

அப்போது குறுக்கிட்ட நவுமன், “நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள். இதைக் கூற நான் விரும்பவில்லை. இருந்தாலும் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறலாம்” என கூறினார்.

இது அங்கிருந்த பிரபலங்கள் அனைவரையும் திகைக்க வைத்தது. பின்னர் தொகுப்பாளர் நிகழ்ச்சிக்கு இடைவேளை விடுவதாக தெரிவித்தார்.

ஆனால், இடைவேளைக்குப் பிறகும் இந்த விவகாரம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சோயிப் தனது மைக்கை கழற்றிவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியேறினார்.

Also Read  இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: 278 ரன்களுக்கு சுருண்டது இந்தியா.!

ஆனால், தொகுப்பாளரோ அவரை சமாதானம் செய்யவோ ஆறுதல் கூறவோ முற்படாமல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவதில் கவனமாக இருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் பலர், “சோயிப் அக்தரிடம் தொகுப்பாளர் மன்னிப்பு கேட்கவேண்டும்” என தெரிவித்து வருகின்றனர்.

Also Read  சொதப்பிய பெங்களூரு அணி… அசால்டாக வெற்றி பெற்ற கொல்கத்தா அணி.!

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் சோயப் அக்தர். அதில், “விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் கோவர் போன்ற ஜாம்பவான்கள் என் சமகாலத்தவர்கள். மூத்தவர்கள் மற்றும் மில்லியன் கணக்கான நேயர்கள் முன்னிலையில் இது நடந்து இருப்பது மிகவும் சங்கடமாக இருந்தது.

அரங்கில் இருந்து வெளியேறச் சொல்லி நெறியாளர் அவமதித்த போது, உங்கள் பேச்சுக்காக மன்னிப்பு தெரிவித்தால் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவித்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. எனக்கு வேறு வழி தெரியவில்லை” என அக்தர் விளக்கம் அளித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ் காட்ட தொடங்கிய எம்.எஸ் தோனி – சி.எஸ்.கே வெளியிட்ட புதிய வீடியோ

Jaya Thilagan

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் – இந்திய அணி அபார வெற்றி!

Lekha Shree

ட்விட்டரில் இருந்து நீக்கினால் என்ன? புதிய தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ட்ரம்ப்!

Tamil Mint

4ஆம் தலைமுறை வாரிசுகளுடன் எலிசெபத் II மற்றும் பிலிப்…! – இத்தனை கொள்ளுப் பேரக் குழந்தைகளா…!

Devaraj

சாம்பல் நிற நீர் நாய் கடலில் விடப்படும் வீடியோ…!

Devaraj

ஒரே ஒரு திராட்சை பழத்தின் விலை ரூ.35 ஆயிரமா?

Lekha Shree

‘உலகமே ஆபத்தான கால கட்டத்தில் உள்ளது’ – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

suma lekha

உயிரிழந்த உறவினரின் எலும்பு கூட்டில் எலக்ட்ரிக் கிட்டார் செய்த இசைக்கலைஞர்!

Tamil Mint

டோக்கியோவில் ஓங்கி ஒலிக்கும் தமிழர்களின் குரல்! – ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மேலும் 5 தமிழர்கள்!

Lekha Shree

85 பேருடன் சென்ற விமானம் நொறுங்கி கோர விபத்து…!

sathya suganthi

ஜார்ஜ் பிளாய்ட் கொலை.. காவல் அதிகாரி குற்றவாளி… வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு…!

Devaraj

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree