“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??!” – வெற்றிகரமாக ரிலீசானது சிம்புவின் ‘மாநாடு’..!


நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் இன்று வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாநாடு’.

இப்படத்தில் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மேலும், தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தது.

Also Read  பிராண்ட் அம்பாசிடர் ஆன நடிகர் சிலம்பரசன்…!

நவம்பர் 25-ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. மேலும், திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கியது.

ஆனால், நேற்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்.

Also Read  "தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த வேண்டும்" - இயக்குனர் பாரதிராஜா

தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என தெரிவித்திருந்தார்.

இதனால ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். சிம்புவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இப்படம் இருந்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

Also Read  சன் டி.வி.யின் பிரபல சீரியல் விரைவில் நிறுத்தமா?... அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்...!

அதன்பின்னர், சில நிதி நெருக்கடிகள் சரிசெய்யப்பட்டு சொன்னபடி இன்று மாநாடு படம் ரிலீசாகும் என தகவல் வெளியானது.

அதன்படி, இன்று வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாநாடு திரைப்படம். படத்தை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??!” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?

Lekha Shree

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் போட்டியாளராக களமிறங்கும் ஓவியா..வெளியான மாஸ் அப்டேட்..!

suma lekha

ராஜா ராணி 2 சீரியலில் இடம்பெற்ற வசனங்களால் சர்ச்சை! தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தல்!

Tamil Mint

சன் டி.வி.யின் பிரபல சீரியல் விரைவில் நிறுத்தமா?… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

Tamil Mint

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று… கொண்டாடும் ரசிகர்கள்!

Lekha Shree

சர்வதேச யோகா தினம்: கடினமான யோகா போஸை செய்த சூரி..!

Lekha Shree

நவம்பர் 2ம் தேதி வெளியாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’…!

Lekha Shree

’கண்ணம்மா’ இடத்தை பிடிக்கும் நடிகை யார்?

suma lekha

எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ‘777 சார்லி’ படம்…! டீசரை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்…!

sathya suganthi

“அந்த அடையாளத்தை தெரியாமல் வைத்திருக்க முடியாது!” – ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்து சீமான் பேச்சு..!

Lekha Shree

பிக் பாஸ் போட்டியாளர்கள் கலக்க வரும் புதிய ஷோ… அட நடுவர்கள் இவர்களா?

Lekha Shree

300 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தை தெறிக்கவிட்ட Enjoy Enjaami பாடல்..!

Lekha Shree