a

வரலாற்றிலேயே மோசமான கப்பல் விபத்து – 325 டன் எண்ணெய்யுடன் கடலில் மூழ்கி கப்பல்


குஜராத் மாநிலம் ஹசிராவில் இருந்து 25 டன் நைட்ரிக் ஆசிட் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களுடன் கொழும்பு துறைமுகத்துக்கு எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பல் கடந்த சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டது.

5 இந்தியர்கள் உள்பட 25 சிப்பந்திகளுடன் சென்றுக்கொண்டிருந்த அந்த கப்பல், கடந்த 20 ஆம் தேதி கொழும்பு துறைமுகத்தை நெருங்கியபோது, திடீரென தீப்பிடித்தது.

கப்பலில் இருந்த நைட்ரிக் ஆசிட் கசிந்ததால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், கொழும்பு துறைமுகத்துக்கு 9 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.

கப்பலில் இருந்த 25 சிப்பந்திகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியா, 2 கப்பல்களை அனுப்பி வைத்தது. 11 நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் தீ அணைக்கப்பட்டது.

Also Read  50 ஆண்டுகளில் காணாத வெள்ளம்! - தத்தளிக்கும் ஆஸ்திரேலியா!

கப்பல் கடலில் மூழ்கினால், அதில் உள்ள எண்ணெய்யால் சுற்றுச்சூழலுக்கு பெரும் சீர்கேடு ஏற்படும் என கப்பலை இழுத்துச்சென்று ஆழ்கடலில் நிறுத்துமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்.

அதன்படி, மீட்புப்படையினர் கப்பலை இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் திட்டமிட்டதற்கு மாறாக கப்பலின் பின்பகுதி கடலில் மூழ்கத் தொடங்கியது.

Also Read  30 ஆண்டுகளாக சிகரெட் பிடித்த நபருக்கு ஏற்பட்ட துயரம்: எச்சரிக்கும் மருத்துவர்கள்!

இதையடுத்து சில மணிநேரங்களில் கப்பலின் மேல்தளம் முழுவதும் நீருக்கு அடியில் சென்று விட்டதாக இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் இன்டிகா டி சில்வா தெரிவித்தார்.

கப்பல் மூழ்கி உள்ளதால் அதில் இருந்த 325 மெட்ரிக் டன் எண்ணெய் கடலில் கலந்து சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

Also Read  அமெரிக்காவில் கலவரம்; வரலாறு காணாத சம்பவம்!

வரலாற்றிலேயே மிக மோசமான கடல் விபத்து என்றும் இது மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். கப்பலின் எரிந்த கழிவுகள் கடற்கரையோரங்களில் ஒதுங்கி உள்ள நிலையில், அவற்றை அப்புறப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது,

கப்பல் மூழ்கியதால் அப்பகுதிக்குள் மீன்பிடி படகுகள் நுழையவும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

கப்பல் தீவிபத்து குறித்து கப்பலில் இருந்த இந்திய அதிகாரி மற்றும் 2 ரஷ்ய அதிகாரிகளின் பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகின் மிக விலை உயர்ந்த ’தங்க’ பிரியாணி! விலை எவ்வளவு தெரியுமா?

Jaya Thilagan

உலகின் மிகப் பழமையான மது ஆலை கண்டுபிடிப்பு – 5,000 ஆண்டுகள் பழமையானது என கணிப்பு

Tamil Mint

வவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா? – புதிய வீடியோ ஆதாரம்

sathya suganthi

“Bye Bye Family”: இந்தோனேசிய விமான விபத்தில் பயணித்த பெண்ணின் கடைசி பதிவு!

Tamil Mint

“குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்பவில்லை!” – வான்டட் ஆக சரணடைந்த குற்றவாளி!

Shanmugapriya

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கும் நகரம்…!

Lekha Shree

அடிக்குற வெயிலுக்கு முடியல…! கூல் ஆக்கிக் கொள்ள நாய்க்குட்டி செய்யும் கியூட்டான செயல்…!

Devaraj

ஒன்றரை ஆண்டுகள் கழித்து தாயைப் பார்த்த மகள்! – கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திக்கொண்ட நெகிழ்ச்சி வீடியோ!

Tamil Mint

கொரோனா இறப்புகளை தடுப்பதில் ரெம்டெசிவர் மருந்து தோல்வி: உலக சுகாதார அமைப்பு.

Tamil Mint

ஐக்கிய அரபு அமீரகம்: ஜூலை 1 முதல் நாடு திரும்ப அனுமதி; விதிகள் என்ன?

Tamil Mint

கொரோனாவால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படும் LBGTQ இளைஞர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்

sathya suganthi

அமேசான் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகினார் ஜெப் பெசோஸ்… என்ன காரணம்?

Tamil Mint