சிவகாசி வெடி விபத்து – பாட்டாசு ஆலை உரிமையாளரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு..!


சிவகாசி அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் வழிவிடு முருகன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.

சிவகாசி அருகே மேட்டுப்பட்டியில் வழிவிடு முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புத்தாண்டு தினமான நேற்று பட்டாசு தொழிற்சாலையில் வழக்கம்போல் பணி தொடங்கப்பட்டது.

Also Read  சின்னத்தை கைவிட்ட கமல்; ம.நீ.ம. விளக்கம்

அப்போது மூலப்பொருட்கள் கலக்கும் பொழுது ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மூன்று அறைகள் தரைமட்டமாகின. மேலும், விபத்தில் குமார், பெரியசாமி, செல்வம் என்ற வீரகுமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Also Read  தமிழகத்தில் இன்று 1,303 பேருக்கு கொரோனா தோற்று உறுதி!

சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பொழுது மேலும் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் படுகாயமடைந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து காவல் துறையினரும் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சிவகாசி அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா நிலவரம் - தமிழகத்தில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் வழிவிடு முருகன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்.!

mani maran

அடுத்த மாதம் சென்னை வருகிறார் பிரதமர் மோடி

Tamil Mint

முதல்வர் நிகழ்ச்சியில் கொரோனா பாதித்த செய்தியாளர், கடலூரில் பரபரப்பு

Tamil Mint

முன்னாள் நீதிபதி கர்ணன் கைது

Tamil Mint

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நாளை மறுநாள் நடை பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tamil Mint

எழுத்தாளர், நடிகர் ‘பாரதி’ மணி காலமானார்..!

Lekha Shree

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அமித்ஷா பேச்சின் பின்னணி என்ன?

Lekha Shree

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்…! முதலமைச்சர் தொடங்கி வைக்கும் திட்டங்களின் முழு விவரம்…!

sathya suganthi

சசிகலா வருகையால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரச்சார தேதி மாற்றம்!

Tamil Mint

‘கொங்கு நாடு’ – டார்கெட் செய்யும் அரசியல் கட்சிகள்… என்ன காரணம்?

Lekha Shree

“ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்டடம் கட்ட வைக்க வேண்டும்”: கமல் ஆவேசம்.!

mani maran

“தமிழ்கூறும் நல்லுலகம்”: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!

Lekha Shree