a

சென்னை மக்களுக்கு குட் நியூஸ் – வருகிறது சிங்கார சென்னை 2.0 திட்டம்…!


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகர மேயராக இருந்த போது, சென்னை மாநகரை அழகுபடுத்தும் நோக்கத்தில் சிங்கார சென்னை திட்டம் கொண்டு வரப்பட்டது.

2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில், ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ‘சிங்கார சென்னை’ திட்டத்துக்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

இதன் பின்னர் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் சிங்கார சென்னை திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் , தனது கனவு திட்டமான சிங்கார சென்னை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

Also Read  இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

இதன்படி சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகரில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தி உள்ளார் என்றும் சிங்கார சென்னை திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக தேவைப்படும் செலவினங்கள் பற்றியும், நிதி ஆதாரங்கள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

சென்னை மாநகரை அழகாக மாற்றும் வகையில் பல்வேறு வித்தியாசமான அம்சங்களுடன் சிங்கார சென்னை திட்டம்-2 தயாராகி உள்ளது என்றும் கலை, கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி, விளையாட்டு, சுகாதாரத்தை பேணும் வகையிலும் இந்த திட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற உள்ளன என்றும் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

‘பிராஜக்ட் புளூ’ என்ற பெயரில் சென்னையில் கடற்கரை பகுதிகளில் பல்வேறு இடங்களை தேர்வு செய்து அழகுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நீருக்கு அடியில் மீன் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது என்றும் நீர் விளையாட்டுகளை கொண்டு வருவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

Also Read  "கொரோனா பாசிடிவ்" முறைகேடு - தமிழக பட்டியலில் கொல்கத்தா நோயாளிகளை காட்டிய Medall லேப்

திருவொற்றியூர், உத்தண்டி உள்பட 6 கடற்கரை பகுதிகளை தேர்வு செய்து அங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக 21.6 கி.மீ. கடற்கரை பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன என்றும் ‘பயோராக் டெக்னாலஜி’ முறையில் இந்த கடற்கரை பகுதிகள் வித்தியாசமான முறையில் மேம்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் கூறினார்.

அண்ணாநகர் டவர் பூங்கா மறுசீரமைப்பு, அறிவியல், என்ஜினீயரிங் மற்றும் கணித பூங்காக்கள், செல்லப் பிராணிகளுக்கான பூங்காவும் உள்ளிட்டவையும் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர்களின் உயர் கல்வியை மேம்படுத்தும் வகையில் ‘ஸ்மார்ட் வசதிகள்’ மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also Read  வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்தாரா ஓபிஎஸ்? பாமகவினர் 20% இடஒதுக்கீடு கேட்டு போராட்டம்! முழு விவரம் இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காதல் ஏமாற்றத்தால் வீடு புகுந்து பெட்ரோலை ஊற்றி இளம்பெண், தாயை கொன்று இளைஞர் தற்கொலை!

Tamil Mint

அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் உறுதி: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

திமுக இன்று மாநிலம் முழுக்க போராட்டம், போலீஸ் குவிப்பு

Tamil Mint

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை குறித்து ஐகோர்ட் கருத்து

Tamil Mint

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்

Ramya Tamil

VPF கட்டணத் தள்ளுபடி – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

Tamil Mint

தமிழர் கண்டுபிடித்துள்ள வாட்ஸ் அப்பிற்கான மாற்று செயலி! 50 ஆயிரத்தை கடந்துள்ள பதிவிறக்கம்!

Tamil Mint

தமிழகத்தின் புதிய அமைச்சரவை…! வைரலாகும் குரூப் போட்டோ

sathya suganthi

காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Mint

தினமும் மணியடித்து பூஜை செய்யும் குரங்கு…! ஆஞ்சநேயர் கோயிலில் நிகழும் அதிசயம்…!

Devaraj

ஐசியூவில் ஆ.ராசா மனைவி! நேரில் சென்று விசாரித்த மு.க.ஸ்டாலின்!

Lekha Shree

தமிழ்நாட்டில் 5 கூடுதல் விமான நிலையங்கள்… மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!

Tamil Mint