பழங்குடியின மக்களுக்காக போராடிய ஸ்டேன் சுவாமி காலமானார்!


பழங்குடியின மக்களுக்காக போராடிய ஒரே தமிழரான ஸ்டேன் சுவாமி மும்பையில் உள்ள சிறையில் இன்று காலமானார். இவருக்கு வயது 84.

அவரது இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் திருச்சி மாவட்டத்தில் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி பிறந்தார்.

கத்தோலிக்க பாதிரியாராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்படுபவர் ஸ்டேன் சுவாமி. கடந்த 50 ஆண்டுகளாக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்நின்று நடத்திய ஒரே தமிழர் இவர்.

ஆனால், இவருக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி தேசிய புலனாய்வு முகமை அவரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது.

Also Read  ‘பாரிஸ் பங்களா சாவி கிடைச்சிடுச்சா?’... ரெய்டு நடத்திய அதிகாரிகள் செம்ம தில்லாக கேலி செய்த டாப்ஸி...!

மேலும் ஸ்டேன் ஸ்வாமி ஒரு மாவோயிஸ்டு எனவும் அவர் நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

இவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று வரையிலும் தனக்கு ஜாமீன் வழங்க கேட்டுப் போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read  பெண் போலீஸ் மர்ம மரணம் - இணையத்தில் வைரலாகும் #justice_for_rupa_tirkey

ஆனால் அவருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் தேசிய புலனாய்வு முகமை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் எல்கர்-பரிஷத் வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர் இவர்.

Also Read  2060-ல் ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் இருக்காது - ஆய்வில் தகவல்!

இந்நிலையில் எதிர்பாராத விதமாக வெளியான இவரது மரண தகவலை அறிந்த இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்

Ramya Tamil

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கில் தளர்வு? நிபுணர்கள் சொன்ன தகவல்…!

sathya suganthi

வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம்

Devaraj

“ஐடி ரெய்டு மூலம் எதிர்க்கட்சிகளை பாஜக அச்சுறுத்தப்பார்க்கிறது” – கனிமொழி

Shanmugapriya

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வுச் சுமையை குறைக்கும் தெலங்கானா அரசு!

Tamil Mint

நாளை ரம்ஜான் பண்டிகை – முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்த வேண்டுகோள்

sathya suganthi

யோகியை ஒதுக்கி வைத்த மோடி, அமித்ஷா…! பதிலடி கொடுத்த உ.பி. பாஜக…!

sathya suganthi

ட்விட்டர் நிறுவனத்தின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு!

Shanmugapriya

ஹரி நாடார் மீது ரூ.1.5 கோடி மோசடி புகார்…!

sathya suganthi

பொதுமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. முன்பதிவில்லா இரயில்வே பயணம் துவக்கம்…

VIGNESH PERUMAL

35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை – வித்தியாசமாக வரவேற்ற குடும்பத்தினர்!

Lekha Shree

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. எப்போது வரை தெரியுமா..?

Ramya Tamil