‘ஹாலிவுட் தரத்தில் ஒரு ஹாரர் படம்?’ – திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையுமா ‘கிராண்மா’?


நம் தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய்ப் படங்களும் திகில் படங்களும் வந்திருந்தாலும் ஹாலிவுட்டுக்கும் நமக்கும் தரத்தில் வித்தியாசம் உள்ளதை நம்மால் உணர முடியும்.

இந்த நிலையில் ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படமாக சோனியா அகர்வால் நடிக்கும் ‘கிராண்மா’ படம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தப் படத்தை எஸ்.எஸ். ஷிஜின்லால் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா, குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் நடித்துள்ளனர்.

மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார்.

Also Read  "ஸ்பிரிட்": 'பாகுபலி' நாயகன் பிரபாஸின் 25-வது படத்தின் டைட்டில்…!

இப்படத்தை GMA பிலிம்ஸ் சார்பில் ஆர். ஜெயராஜ், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். சங்கர் ஷர்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் மலைப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. மேலும், படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  தீபாவளி ரேஸில் இணையும் அருண்விஜய்யின் அதிரடி ஆக்சன் மூவி..! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

சோனியா அகர்வால் கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்டு, சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து படக்குழுவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளாராம்.

சினிமா மீது தீரா காதல் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளதால் திகில் பட ரசிகர்களுக்கு ‘கிராண்மா’ படம் நிச்சயம் விருந்தாக அமையும் என கூறுகின்றனர். விரைவில் இபபடம் ரசிகர்களைப் பயமுறுத்த திரைக்கு வரவிருக்கிறது.

Also Read  நடிகர் விவேக் மறைவிற்கு தமிழில் இரங்கல் தெரிவித்த ஹர்பஜன் சிங்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘விக்ரம்’ அப்டேட் – 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு..! புகைப்படம் வெளியிட்ட லோகேஷ்..!

Lekha Shree

வெளியானது ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் முதல் பாடல்…!

Lekha Shree

பீஸ்ட் படப்பிடிப்பில் ஆடி பாடும் தளபதி: இணையத்தில் வைரலாகும் போட்டோ.!

suma lekha

இரண்டு ஓடிடி தளங்களில் வெளியானது ‘அண்ணாத்த’…!

Lekha Shree

பிக்பாஸ் வீட்டில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நமீதா மாரிமுத்து? அவரே சொன்ன பதில்..!

suma lekha

சிறப்பு அங்கீகாரத்திற்கு தேர்வான ஜோதிகாவின் பிரபல திரைப்படம்..!

Lekha Shree

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட காதல் தம்பதிக்கு சர்ப்ரைஸ்… தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்…!

malar

ஓடிடி தளத்தில் வெளியாகும் “அனபெல் சேதுபதி”: ரிலீஸ் தேதி தெரியுமா.?

mani maran

டோலிவுட்டுக்கு செல்லும் ‘கைதி’ அர்ஜுன் தாஸ்..!

Lekha Shree

கமல்ஹாசனை கலாய்த்த கஸ்தூரி! வைரலாகும் ட்விட்டர் பதிவு!

Lekha Shree

படப்பிடிப்பின் போது வலது கையில் காயம்: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அருண் விஜய்.!

mani maran

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் விஜய் சேதுபதி சந்திப்பு.!

suma lekha