நடன இயக்குனர் சிவசங்கரின் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்க முன்வந்த நடிகர் சோனு சூட்..!


கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ள பிரபல நடன இயக்குனர் சிவசங்கரின் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார் நடிகர் சோனு சூட்.

பிரபல நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹைதராபாதில் உள்ள AIG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Read  அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் பட வில்லன்..! யார் தெரியுமா?

சிவசங்கர் மாஸ்டர், அவரது மனைவி மற்றும் மூத்த மகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார். அவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளதாக தெரிகிறது.

Also Read  இன்றிரவு 10 மணிக்கு தொடங்குது இரவு நேர ஊரடங்கு

இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை அதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தனது அப்பாவுக்கு உதவும்படி சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள் விடுத்தார்.

அதோடு திரைத்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மண்வாசனை, திருடா திருடி, மகதீரா, பாகுபலி 1 உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் சிவசங்கர் மாஸ்டர்.

Also Read  அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

இவர் மகதீரா படத்தில் வரும் தீர தீர பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதோடு இவர் வரலாறு, சர்க்கார், கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவரது சிகிச்சைக்கு தன்னால் முடிந்த நிதியுதவியை நிச்சயம் செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் சோனு சூட்.

இதற்கு நடிகை சனம் ஷெட்டி நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அதற்கு சோனு சூட், “இது என் கடமை” என பதிலளித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அஜித்தின் ‘வலிமை’ குறித்த அதிரிபுதிரி அப்டேட்

Tamil Mint

8 ஆண்டுகளுக்கு பிறகு விஷாலுடன் ஜோடி சேரும் சுனைனா.?

suma lekha

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரம்… நியூயார்க்கில் ஒலித்த பெருமை..!

Lekha Shree

ஓடிடியில் ‘த்ரிஷ்யம் 2’… ரிலீஸ் தேதி உடன் வெளியான டிரெய்லர்…!

Tamil Mint

‘ஜெய் பீம்’ சர்ச்சை – மூச்சுவிடாத முன்னணி நடிகர்கள்..!

Lekha Shree

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை முந்துமா ‘அஜித்தின்’ வலிமை?

Lekha Shree

“ரஜினி மற்றும் விஜய்க்கு என்னிடம் கதைகள் உள்ளன” – மனம் திறந்த கவுதம் மேனன்

Shanmugapriya

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு காலமானார்!

Jaya Thilagan

‘100 மில்லியன்’ பார்வைகளை கடந்த ‘தாராள பிரபு’ பாடல்…!

Lekha Shree

கல்யாணத்திற்கு பிறகு கயல் ஆனந்திக்கு கூடிய மவுசு… அடுத்தடுத்து குவியும் படவாய்ப்புக்கள்…!

Tamil Mint

வாடிவாசல் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?… சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய செய்தி…!

Tamil Mint

பிக்பாஸ் கவினுக்காக கரம் கோர்த்த 6 முன்னணி இயக்குநர்கள்… வெளியானது லிப்ட் மோஷன் போஸ்டர்…!

malar