வரி ஏய்ப்பு செய்தாரா பாலிவுட் நடிகர் சோனு சூட்?


பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீரென ரெய்டு நடத்தினர். அதில் அவர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது.

நடிகர் சோனு சூட் தமிழில் ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கில் அருந்ததி படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் கதிகலங்க வைத்திருப்பார்.

Also Read  ஆக்‌ஷன் படத்தின் பிரபு தேவா.. வெளியான மாஸ் அப்டேட்

இவர் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தியதால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை தன் சொந்த செலவில் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைத்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றார்.

தன்னுடைய சொத்துக்களை அடகு வைத்து கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, அதன் மூலம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தார்.

Also Read  துணை ஆட்சியராக பணி நியமனம் செய்யப்பட்ட பிரபல நடிகரின் மகன்..! குவியும் வாழ்த்துக்கள்..!

புலம்பெயர் தொழிலாளர்கள் அவருக்கு சாலைகளில் பேனர் வைத்து தங்களது நன்றியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் டெல்லி மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகளுக்கான விளம்பர தூதராக இவரை நியமித்தது.

இந்நிலையில் மும்பையில் உள்ள சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தியனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தின் நாயகன் இவரா? வெளியான சூப்பர் அப்டேட்!

வெளிநாடுகளில் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கிடைத்த நன்கொடைகளை சோனு சூட் மறைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு நெட்சன்கள் சிலர் எதிராகவும் சிலர் ஆதரவாகவும் கம்மெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கம்பளா போட்டியில் இந்தியாவின் உசேன்போல்ட் சாதனை…!

Devaraj

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பறிபோகும் உயிர்கள்! டெல்லியில் ஒரே நாளில் 25 நோயாளிகள் உயிரிழப்பு!

Devaraj

“கொரோனா தேவி சிலையை போலவா உள்ளேன்? ” – கடுப்பான வனிதா

Shanmugapriya

தங்கம் போன்ற வங்காளத்தை உருவாக்குவோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Tamil Mint

சசிகலா கிட்ட இருந்து என்னோட சொத்தை மீட்டு கொடுங்க: கோரிக்கை வைக்கும் கங்கை அமரன்.!

mani maran

“ஆப்கானில் பெட்ரோல் விலை குறைவு; அங்கு செல்லுங்கள்” – பாஜக பிரமுகரின் பேச்சால் சர்ச்சை..!

Lekha Shree

‘கொரோனா இல்லை’ என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே திருப்பதியில் அனுமதி!

Lekha Shree

“பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதற்கு?” – திருடனின் ஆதங்கம்… ம.பி.யில் சுவாரசிய சம்பவம்…!

Lekha Shree

நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது “டீம் 83”: படக் குழு அறிவிப்பு.!

mani maran

கையில் குழந்தை… சூட்கேசில் மனைவியின் பிணம்… கணவரின் கொடூர கொலை!

Lekha Shree

கோட்டையில் கொடியேற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

mani maran