“விரைவில் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் கோலி!” – ஆருடம் கணித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்..!


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விரைவில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து முழு ஓய்வை அறிவிப்பார் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கூறியுள்ளார்.

விராட் கோலி டி20 தொடரின் அரையறுதிக்குள் நுழையாமல் வெளியேறியுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த சூழலில் விராட் கோலி விரைவில் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பார் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தக் அகமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முஸ்தாக் அகமது கூறுகையில், “ஒரு வெற்றிகரமான அணியின் கேப்டன் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார் என்றால் அப்போது அந்த அணியின் டிரெஸ்ஸிங் ரூமுக்குள் ஏதோ ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம்.

Also Read  ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! மிரண்டு போன பிசிசிஐ!

நான் பார்த்தவரையில் இந்திய அணியில் தற்போது இரண்டு பிரிவுகள் தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மும்பை பிரிவு மற்றும் டெல்லி பிரிவு என இரண்டு உள்ளன. கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சொன்ன கோலி டி20 போட்டிகளில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறுவதாக அறிவிப்பார். ஆனால் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்று நினைக்கிறேன்.

Also Read  இந்திய வீரர் கே.எல்.ராகுலுக்கு அபராதம்... காரணம் என்ன?

கேப்டன் பதவி விலகல் அறிவிப்பு என்பது விரைவில் முழு ஓய்வு குறித்து அறிவிக்க நாள் நெருங்குகிறது என்பதையே உணர்த்துவதாக உள்ளது.

டி20 உலக கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான முக்கிய காரணமே ஐபிஎல் தான். ஐபிஎல் விளையாடுவதற்காக நீண்ட நாட்களாகப் இந்திய வீரர்கள் ப்யோபபில் வாழ்க்கையை கடைபிடித்தனர்.

Also Read  மும்பை டெஸ்ட் - சர்ச்சையை கிளப்பியுள்ள விராட் கோலியின் அவுட்…!

அதனால், மிகவும் களைப்படைந்து உள்ளார்கள். அதுதான் அவர்களை மிகவும் பாதித்துள்ளது” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்டத்தை 4 மாநிலங்களில் நடத்த மத்திய அரசு முடிவு

Tamil Mint

பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு வழங்கிய தளர்வுகள் இன்று முதல் அமல்

Tamil Mint

குடிபோதையில் முதலையுடன் பேசிக் கொண்டிருந்த நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Tamil Mint

ஆன்-லைனில் தரிசன டிக்கெட்: TTD சலுகை

Devaraj

ஐபிஎல் 2021: பெங்களூரு அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகல்…!

Lekha Shree

மகாராஷ்டிரா சட்டமன்ற ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 36 பேருக்கு கொரோனா! அதிகரிக்கும் பாதிப்பு!

Jaya Thilagan

சதம் அடித்ததால் சாதனைப்பட்டியலில் இடம்பிடிக்கவுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்…!

Lekha Shree

“ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம்!” – ஒலிம்பிக் போட்டி தலைவர்

Lekha Shree

சென்னை, கோவை உட்பட 35 நகர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு… அமேசான் நிறுவனம் முடிவு..!

suma lekha

“இந்தப் பொறுப்பு இவருக்கு மிகவும் பொருத்தமானது” -சைலேந்திர பாபுவுக்கு சீமான் வாழ்த்து!

Shanmugapriya

டெல்லி கலவரத்தில் எங்களை தாக்கியது அடியாட்கள் தான்… விவசாயிகள் இல்லை… போலீசார் அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றது

Tamil Mint