ஒரே பிரசவத்தில் 10 குழந்தை…! எல்லாம் பொய்யா…! வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்…!


தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயது பெண்மணி ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாக கடந்த வாரம் செய்தி வெளியானது. 

 ஜூன் 7 ஆம் தேதி பிரிட்டோரியா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கோஷியாமே தாமரா சிதோலே என்ற பெண்ணுக்கு 10 குழந்தைகள் பிறந்தது என்றும் அந்த குழந்தைகளில் பெண்கள் 3 பேர், ஆண்கள் 7 பேர். குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. இது உலக சாதனையாக கருதப்பட்டது.

இருப்பினும் உடல் நலனை கருத்தில் கொண்டு குழந்தைகளை சில மாதங்கள் இன்குபெட்டரில் வைத்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என செய்தி வெளியானது.

இதையடுத்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பிரிட்டோரியா அமைந்துள்ள குவாத்தெங் மாநிலத்தில் உள்ள எந்த மருத்துவமனையிலும் இத்தகைய பிரசவம் நடந்ததாக தங்களுக்கு எந்த பதிவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

10 குழந்தைகள் பிறந்தது என்பது விளம்பரத்திற்காகவும், நன்கொடைக்காகவும் கூறியது என கூறப்படுகிறது என்றும் சிதோலே 10 குழந்தைகள் பெற்ற எடுக்கவில்லை என்றும் தென்னாப்பிரிக்கா தேசிய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மற்றொரு புறம் மருத்துவ அலட்சியத்தை மறைக்க அதிக குழந்தை பிறப்பை மூடிமறைப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்  சிதோலே  கைது செய்யப்பட்டு  மனநல சிகிச்சைக்காக ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள டெம்பீசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.Also Read  அடேங்கப்பா அமேசான்: கொரோனா காலத்தில் இவ்வளவு வருமானமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜெர்மனி அரசு…!

Devaraj

“எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்க நான் காரணமா?” – அதிர்ந்த பெண் மாலுமி!

Lekha Shree

தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர்கள்…!

Lekha Shree

இந்தியாவிற்காக ஒளியூட்டப்பட்ட நயாகரா நீர்வீழ்ச்சி! – கண்கவர் புகைப்படம்

Shanmugapriya

பிரபல புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் மரணம்!

Lekha Shree

சீனாவில் பரவும் புதிய வகை பறவைக் காய்ச்சல்…!

sathya suganthi

பயணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…. இது அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை பாடம்…

VIGNESH PERUMAL

டயானாவின் 60வது பிறந்தநாள்…! முரண்பாடுகளை மறந்து இணைந்த வில்லியம்ஸ்-ஹாரி…!

sathya suganthi

12 மாடி குடியிருப்பு திடீரென இடிந்து தரைமட்டம் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

sathya suganthi

டிரம்ப் புது குண்டு; ரஷ்யா, சீனா ஷாக்.

Tamil Mint

அடேங்கப்பா அமேசான்: கொரோனா காலத்தில் இவ்வளவு வருமானமா?

Tamil Mint