a

தென்மேற்கு பருவமழை தொடங்கியது… அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!


இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலம் ஆகும். தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் நல்ல மழையைத் தரும்.

இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இரண்டு நாட்கள் தாமதமாக இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

Also Read  திமுக அரசு கோரிக்கைக்கு உடனே செவி சாய்த்த மத்திய அரசு...!

கேரளாவின் தெற்கு பகுதியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளில் இயல்பாகவும் இயல்பை விட அதிகமாகவும் மழை பெய்யலாம் என வானிலை மையம் கணித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அரேபிய கடல் பகுதியில் லட்சத் தீவு பகுதி, தெற்கு கேரளா, தென்தமிழகம், மாலத்தீவின் மீதம் உள்ள பகுதிகளில் இன்று தென்மேற்கு பருவம் தொடங்கி உள்ளது.

Also Read  கொரோனாவை அடுத்து அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை - 518 பேர் பாதிப்பு!

அடுத்த இரண்டு நாட்களில் பருவக்காற்று பிற பகுதிகளுக்கு நகரக் கூடும். கேரளா மற்றும் கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையால் வடமாநிலங்கள் மழை பொழிவை பெறுகின்றன. அதே வேளையில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக மழையை பெறுகின்றன.

Also Read  மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

இதேபோல் தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் உள்ள காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றின் நீர் திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்கள் அதிக பாசன வசதி பெறுகின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கரும்பூஞ்சை சிகிச்சைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

Lekha Shree

சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை

Tamil Mint

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

வாக்காளர் பட்டியல் குறித்து சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

Tamil Mint

பாலியல் புகார் – தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்குப்பதிவு!

Lekha Shree

இன்று முதல் அக்னி நட்சத்திரம்…! மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை…!

sathya suganthi

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் இயக்கம்

Tamil Mint

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் இதோ!

Lekha Shree

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து

Tamil Mint

வானதி சீனிவாசனுக்கு சிக்கல்.. கோவை தெற்கில் மறு வாக்கு எண்ணிக்கை..?

Ramya Tamil

தமிழகத்தின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

Tamil Mint

துரைமுருகன், ஜெயக்குமார் இல்லாத சட்டமன்றமா?

Devaraj