“எங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடினார் கோலி… அதனால் வென்றோம்!” – டீன் எல்கர்


டிஆர்எஸ் சர்ச்சை குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் கூறுகையில், “விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்டின் போது களத்தில் எதிரணியினரை வசைபாடுவதில் திசை திருப்பப்பட்டு கவனத்தை இழந்தார். இதனால் நாங்கள் இலக்கை நோக்கி செல்ல ஒரு சாளரம் கிடைத்தது” என்று கூறியுள்ளார்.

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டத்தில் 212 ரன்கள் இலக்கை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி ஆடி வந்த போது டீன் எல்கர் அஸ்வின் வீசிய பந்து lbw என்று கள நடுவர் தீர்ப்பு அளித்தார்.

ஆனால், எல்கர் ரிவ்யூ செய்த போது பந்து மேலே சென்றது தெரியவந்ததால் நாட் அவுட் ஆன தீர்ப்பானது. இதில் கடுப்பான அஸ்வின் மற்றும் கேப்டன் விராட் கோலி ஸ்டம்ப் மைக் முன்னால் வெறுப்பில் சில வார்த்தைகளை பேசியுள்ளனர்.

அதில் கோலி, “பந்தை தேய்த்து பளபளப்பேற்றும் போது உங்கள் அணியினர் மீது கவனம் செலுத்து. எதிரணியினரை அல்ல. எப்போதும் யாரையாவது எதிலாவது மாட்டி விடுவது” என்று கூறியுள்ளார்.

Also Read  தடுப்பூசி சான்றிதழ்களை சமர்பிக்க போக்குவரத்துத்துறை ஊழியர்கள் உத்தரவு..!

மேலும் அஸ்வின், “வெற்றி பெற இதை விட சிறந்த வழிகள் உள்ளன. சூப்பர் ஸ்போர்ட்ஸ்” எனப் பேசியுள்ளார். அதையடுத்து கே.எல் ராகுல் “ஒரு நாடே 11 வீரர்களுக்கு எதிராக செயல்படுகிறது” என கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஐசிசி அதிகாரிகள் இந்திய அணி நிர்வாகத்திடம் கோலி, அஸ்வின், ராகுல் நடத்தை குறித்து எச்சரித்துள்ளதாக espn cric info செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போட்டி முடிந்தபின் கோலி கூறுகையில், “அது பற்றி சர்ச்சை செய்ய விரும்பவில்லை” என கூறி தப்பித்துக்கொண்டார்.

விராட், அஸ்வின் மற்றும் ராகுலின் இந்த செய்கைக்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read  கேப்டன்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்ட கோலி..பதவி பறிப்புக்கு பின்னால் ராகுல் டிராவிடா?

கேப்டவுனில் நடைபெற்ற 3-வது மற்றும் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினர்.

இதுகுறித்தும் கோலியின் செய்கை குறித்தும் தென்னாபிரிக்க அணி கேப்டன் டீன் எல்கர் கூறுகையில், “கோலியின் செய்கை ஒரு விதத்தில் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. நாங்கள் கொஞ்சம் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் எங்களுக்கு தேவையான இலக்கை எட்ட கோலியின் செய்கை உதவியது.

காரணம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இந்தியர்கள் உண்மையில் விளையாட்டைப் பற்றி மறந்து விட்டார்கள். கிரிக்கெட் ஆடுவதை விடுத்தது எங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடினார்கள். இந்த சர்ச்சை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஏனெனில் இறுதியில் நாங்கள் வெற்றி பெற அது உதவியது!

Also Read  2வது டி20: ஷிகர் தவான் உட்பட 8 வீரர்கள் இல்லை? புது வீரர்கள் யார் யார்?

இந்திய அணிக்கு எதுவும் சரியாக போகவில்லை. சமீப காலமாக இந்தியா இத்தகைய அனுபவத்திற்கு பழக்கம் ஆகவில்லை. எனவே வார்த்தை போரில் இறங்கினார்களே தவிர ஆட்டத்தில் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் நாங்கள் இலக்கை நோக்கி சரியாக பயணித்தோம். நாங்கள் கூடுதல் கட்டுக்கோப்புடன் ஆட வேண்டி இருந்தது. உள்ளூர் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைவது ஒருபோதும் சிறந்ததல்ல. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முன்பு அணி வீரர்களிடம் பேசினேன்.

வீரர்கள் தாங்களே பொறுப்பு ஏற்று தங்கள் விக்கெட்டை தூக்கி எறியாமல் மதிப்பு கொடுத்தனர். வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை கொண்டு வந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் நிம்மதியாக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“காற்றிலும் பற்றாக்குறை…மோடியே பதவி விலகுங்கள்…” – அருந்ததி ராய் காட்டம்

sathya suganthi

செக்யூரிட்டி டூ ஐஐம் பேராசிரியர்! – வறுமையை வென்றெடுத்து சாதித்த இளைஞர்!

Shanmugapriya

மம்தா பானர்ஜி அனுதாபம் தேடுகிறார்…! – தலிபான்களா தாக்கினார்கள் என பாஜக நக்கல்

Devaraj

UPSC தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது நடைபெற உள்ளது தெரியுமா..?

Ramya Tamil

ரூ.12 கோடி மதிப்பிலான புதிய காருக்கு அப்டேட் ஆன பிரதமர்..!

suma lekha

தமிழகத்தை நெருங்கிய கறுப்பு பூஞ்சை நோய்…! ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் பாதிப்பு…!

sathya suganthi

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்

Tamil Mint

கருப்பு பூஞ்சை குணப்படுத்தக்கூடியதா? – தமிழக சுகாதாரத்துறை கூறுவது என்ன?

Shanmugapriya

புதிய வனப்பாதுகாப்பு சட்ட திருத்தம் – எதிர்ப்புகள் வலுக்க காரணம் என்ன?

Lekha Shree

சுப்பிரமணியன் சுவாமியின் அதிர்ச்சியைக் கிளப்பும் புது குண்டு

Tamil Mint

மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி: 243 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா!

Tamil Mint