தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!


தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், “உள் தமிழகம் முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

Also Read  சென்னையில் குடிநீர் தேவைக்கு 637 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு!

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம்.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் ஜூலை 10 முதல் 12 வரை நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அதாவது திண்டுக்கல், தென்காசி மாவட்டம் மற்றும் ஈரோடு, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை முதல் ஜூலை 12 வரை குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

Also Read  'கொங்கு நாடு' - டார்கெட் செய்யும் அரசியல் கட்சிகள்… என்ன காரணம்?

ஜூலை 10 முதல் 12 வரை மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

ஜூலை 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், அந்தமான் மற்றும் மாலத்தீவு, தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

Also Read  "தமிழகத்துடன் பேசுவது நம் கவுரவத்துக்கு ஆகாது!" - கர்நாடக மாநில காங்., தலைவர் ஆவேசம்!

இதனால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருநெல்வேலியில் மீண்டும் நயினார் நாகேந்திரன்? விட்டதை பிடிப்பாரா?

Lekha Shree

அடுத்தடுத்து கொரோனாவிடம் சிக்கும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள்…!

Devaraj

ரஜினி படத்தில் கமல்: லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்

Tamil Mint

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி : ரகோத்தமன் கொரோனாவால் பலி…!

sathya suganthi

தயாரிப்பாளர்களின் நிபந்தனையை ஏற்க திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு

Tamil Mint

தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் இ பாஸ்! – யார் யாருக்கு கட்டாயம் தெரியுமா?

Shanmugapriya

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்…!

Lekha Shree

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு எப்படி நடக்கும்…! சுவாரஸ்யமான தகவல்கள்…!

sathya suganthi

வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி விடுவிப்பு

Tamil Mint

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? – தமிழக அரசு ஆலோசனை!

Lekha Shree

உதயநிதியை எதிர்த்து போராட்டம்

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?

Lekha Shree