மனநலனை பாதுகாக்க ஸ்பெயின் நாட்டில் ‘Crying Room’ அறிமுகம்..!


நம் அனைவருக்குமே மனதில் ஒரு வித இறுக்கம் எப்போதும் இருக்கும். அந்த இறுக்கம் குறித்து யாரிடமும் சொல்லவும் மனமில்லாமல், அதனை மறக்கவும் இயலாமல் நமது உணர்வுகள் நம் கண்களை குளமாக்கும்.

வேறு யாரும் பார்த்து விட கூடாது என்பதற்காக கண்ணீரை கூட மறைக்க வேண்டிய இக்கட்டான ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

இதுபேன்ற சங்கடங்களை தீர்க்கவும் மக்களின் மனநலனை பாதுகாக்கவும் ஸ்பெயின் நாட்டில் அழுகை அறை என்ற ‘Crying Room’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த அழுகை அறைக்கு மக்கள் வருகை தந்து தாங்கள் யாரிடம் மனம் விட்டு அழ வேண்டும் என நினைத்தார்களோ அவர்களை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசலாம்.

Also Read  29 நாடுகளுக்கு பரவிய 'லாம்ப்டா' வேரியண்ட்! எந்தளவிற்கு ஆபத்து?

இல்லையென்றால் உளவியல் நிபுணர்களிடம் தங்கள் மனதில் உள்ளவற்றை கொட்டி தீர்க்கலாம். மனம் விட்டு பேச ஆள் இல்லையே என்ற ஏக்கம் மக்களை உளவியல் ரீதியாக பாதிப்பதால் உளவியல் நிபுணர்கள் இணைந்து இந்த அழுகை அறையை அறிமுகம் செய்துள்ளனர்.

ஸ்பெயினில் 10-ல் ஒருவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதனை சரிசெய்ய முடிவெடுத்த அரசு அதற்காக அழுகை அறை என்ற திட்டத்தை உருவாக்கியது.

உலக மனநல தினமான அக்டோபர் 10-ம் தேதி அன்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், மனநலம் சார்ந்த விழிப்புணர்வுக்காக சுமார் 116 மில்லியன் டாலர் தொகையைத் தனியாக ஒதுக்கினார்.

மேலும், “மன அழுத்தம் என்பது பேசவோ, விவாதிக்கவோ தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. இது ஒரு பொது சுகாதார பிரச்சனை. இதுகுறித்து பேசி அதை வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றி, மன அழுத்தத்தைப் போக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Also Read  பூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

இந்த அழுகை அறைக்கு சென்று, மனதில் உள்ள கோபம், எரிச்சல், ஏமாற்றம், தனிமை உள்ளிட்ட அனைத்து இறுக்கமான உணர்ச்சிகளையும் பேசி அதற்கான தீர்வினை காணலாம்.

இந்த அழுகை அறைக்குள் நுழைகிறவர்கள் யாரிடம் மனம் விட்டுப் பேச விருப்பப்படுகிறார்களோ அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம்.

Also Read  "பூமிக்கு பக்கத்தில் இப்படி ஒரு கோளா?" - ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்… களத்தில் இறங்கும் நாசா..!

குறிப்பாக மனநல ஆலோசகரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசும் வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த அழுகை அறையில், பாத் டப் போன்ற ஒன்றில் வண்ணநிற பந்துகள் நிரப்பப்பட்டுள்ளது.

அழுகை அறைக்கு வருபவர் அதன்மீது அமர்ந்து அருகில் உள்ள தொலைபேசியை எடுத்து தனக்கு பிடித்தவர்களிடம் மனம்விட்டு பேசலாம்.

இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், “மனநலம் சார்ந்த பிரச்சனைகளை இவ்வாறு காட்சிப்படுவது என்பது உண்மையில் அருமையான யோசனை. ஏராளமான நாடுகளில் அழுவது என்பது ஏதோ தவறான செயல் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனை முதலில் சரி செய்ய வேண்டும்” என கூறினார்.

மக்களின் மன நலனை பாதுகாக்க ஸ்பெயின் அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்வது போல மற்ற நாடுகளும் செய்தால் சிறப்பாக இருக்கும் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சீனா: உருமாறிய வகை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் மனிதர்..!

Lekha Shree

காசாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு…!

Lekha Shree

காபூல் விமான தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் மீது அமெரிக்கா பதில் தாக்குதல்..!

suma lekha

1,46,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முற்றிலும் புதிய மனித இனம் கண்டுபிடிப்பு..!

Lekha Shree

ஆக்ஸ்போர்ட்டின் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்!!

Tamil Mint

உலக அரங்கில் கவனம் ஈர்த்த மியான்மர் அழகி – ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க கோரிக்கை

sathya suganthi

யூரோ கால்பந்தாட்ட இறுதி போட்டி… வெற்றியாளரை கணித்த புலி..!

Lekha Shree

மரண பீதியில் செய்தி வாசித்த செய்தியாளர்: காரணம் என்ன தெரியுமா.?

mani maran

குறையும் ஆல்பா; அதிகரிக்கும் டெல்டா: பீதியில் அமெரிக்கா…!

sathya suganthi

பாம்பின் விஷத்தில் இருந்து கொரோனாவுக்கு மருந்து? ஆச்சரியமூட்டும் தகவல்..!

Lekha Shree

இடுப்பு அளவை 18 Inch-லேயே பராமரிக்க தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடும் பெண்: அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்-லையே இல்லையே.

mani maran

உடல் எடையை குறைக்க வேண்டுமா? – இந்த 2 பொருட்கள் போதும்!

Lekha Shree