a

‘பாடும் நிலா’ எஸ்பிபி-க்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா?


இன்று பாடும் நிலா என்ன செல்லமாக மக்களால் அழைக்கப்படும் எஸ்பிபியின் பிறந்தநாள். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் தென் இந்தியாவையே தனது குரலால் கட்டிப் போட்டு வைத்து இருந்தவர் இவர்.

எம்ஜிஆர், சிவாஜி, கமல், மோகன், சிம்பு, தனுஷ் என நான்கு தலைமுறை நடிகர்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார்.

மேலும் எம்எஸ்வி தொடங்கி அனிருத் வரை கிட்டத்தட்ட தமிழ்சினிமாவில் இயங்கி வரும் அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பணியாற்றியிருக்கிறார்.

16 மொழிகளில் 45,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புரிந்தவர் எஸ்பிபி. 6 முறை தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் கடைசியாக பத்மவிபூஷன் என இந்தியாவில் உள்ள அனைத்து உயரிய விருதுகளையும் பெற்ற ஒரே கலைஞன் இவர்தான்.

இவர் 45 படங்களுக்கு இசை அமைத்து உள்ளார். 70 படங்களில் நடித்துள்ளார். 120க்கும் மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் செய்துள்ளார். அதோடு பல சினிமாக்களை தயாரித்தும் இருக்கிறார்.

இப்படி பன்முகம் கொண்ட இவரது முதல் சினிமா வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. இதுகுறித்து இவரது பால்ய நண்பன் முரளி அவரது இறுதி அஞ்சலி கூடாது கூறியிருந்தார்.

Also Read  'குக் வித் கோமாளி' பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்…. அதுவும் இந்த நடிகருடனா?

மேடைகளில் அரிகதை நடத்தும் ஒரு கலைஞருக்கு பிறந்தவர்தான் எஸ்பிபி. இசையின் மேல் அளவுகடந்த ஆர்வம் உண்டு. முதலில் இன்ஜினியரிங் கனவோடு அனந்தபூர் இல் உள்ள ஜேஎன்யூ கல்லூரியில் படித்தார்.

ஆனால், அப்போது டைபாய்டு காய்ச்சல் வந்ததால் படிப்பை இடையிலேயே நிறுத்தும்படி ஆயிற்று. பின்பு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ரேடியோ என்ஜினீயரிங் படித்தார். அந்த தருணத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளார்.

அந்த வகையில் சென்னையில் கடந்த 1964ஆம் ஆண்டு தெலுங்கு கலாச்சார சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடகி ஜானகி கையில் பரிசு பெறுகிறார். பின்னர் கோதண்டராமன், கண்டசாலா ஆகியோர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அதைத்தொடர்ந்து சினிமா வாய்ப்புக்காக பல இசையமைப்பாளர் மற்றும் பல கம்பெனிகளில் ஏறி இறங்குகிறார். எப்படியாவது சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நண்பர் முரளி உடன் சேர்ந்து கோடம்பாக்கத்தில் அறை எடுத்து தங்குகிறார்.

Also Read  மாஸ்டர் பட பிரபலத்திற்கு திருமணம்... விஜய் ஸ்டைலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிளிக்கிய செல்ஃபி வைரல்...!

ஒருவழியாக தெலுங்கு இசையமைப்பாளர் கோதண்டபாணி இவருக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறார். கால்ஷீட் 1966ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி மதியம் 2 மணிக்கு என முடிவாகிறது.

ஆனால், அன்று எஸ்பிபி-ஐ அழைத்து செல்ல எந்த காரும் வரவில்லை. பின்னர், பதறிப்போன எஸ்பிபி மற்றும் முரளி இருவரும் சைக்கிளில் சென்று விடலாம் என முடிவெடுத்து வடபழனி விஜயா ஸ்டுடியோவிற்கு சென்றனர்.

ஆனால், அங்கிருந்த வாட்ச்மேன் இருவரையும் சரமாரியாக திட்டுகிறார். “அப்பா, அம்மா கஷ்டப்பட்டு காலேஜூக்கு படிக்க அனுப்பிச்ச சூட்டிங் பார்க்க வரீங்க. நீங்க பாட வந்த மாதிரி தெரியல. பொய் சொல்லாதீங்க” என ஏசுகிறார்.

இதனால் பதறிப்போன எஸ்பிபி மனம் உடைந்து நிற்க அப்போது முரளி கெஞ்சி கூத்தாடி ஸ்டுடியோவிற்குள் நுழைந்து ஆட்களை கூட்டிக்கொண்டு வருகிறார்.

இப்படித் தான் முதன்முதலில் விஜயா ஸ்டூடியோவிற்கு எஸ்பிபி விஜயா ஸ்டுடியோவிற்குள் நுழைகிறார். நுழைந்த உடனே, “இன்னும் ஒரு பாட்டு கூட பாடவில்லை அதற்குள் இவ்வளவு அலட்சியமா? கால்ஷீட் 2 மணிக்கு நீ 4 மணிக்கு வர” என இசையமைப்பாளர் திட்டுகிறார்.

Also Read  "ஒரு மென்மையான நேர்மையான மனிதர் காலமாகிவிட்டார்!" - நடிகர் தனுஷ் இரங்கல்

இதனால் திடுக்கிட்டுப்போன எஸ்பிபி, “என்னை அழைத்து வருவதற்காக யாரும் வரவில்லை. அதனால் நேரமாகிவிட்டது” என கூறுகிறார்.

அதன்பின்னர் விசாரித்த போது தான் தெரிந்தது எஸ்பிபி-ஐ அழைத்து வர அனுப்பப்பட்ட கார் ஒரு குழந்தையை இடித்துவிட்டது என்று. அதனால் டிரைவர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இப்படி கஷ்டப்பட்டு கிடைத்த வாய்ப்பின் மூலம் தான் எஸ்பிபி 1966ம் ஆண்டு ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா’ படத்தில் தனது முதல் பாடலை பாடியுள்ளார்.

அன்று ஆரம்பித்த அவரது குரலின் பயணம் இன்று அவரை ஒலித்து கொண்டே இருக்கிறது. “இந்த தேகம் மறைந்தாலும்.. இசையாய் மலர்வேன்” என அவர் பாடிய பாலின் வரிகளுக்கு ஏற்ப இன்று அவர் மறைந்துவிட்டாலும் அவரது குரல் மக்களின் மனதில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மேலாடை இன்றி கோட் மட்டும் அணிந்து ரைசா வெளிட்ட ஹாட் புகைப்படம்…!

sathya suganthi

விஜய்யுடன் மீண்டும் இணையும் லோகேஷ் கனகராஜ்? அப்ப இன்னொரு ’மாஸ்டர்’ பீஸ் ரெடி!

Tamil Mint

“தனுஷை கதாநாயகனாக நினைத்து எழுதப்பட்ட கதைதான் பரியேறும் பெருமாள்” – மாரி செல்வராஜ்

Shanmugapriya

‘தளபதி 65’ படத்தின் டைட்டில் இதுதானாம்…! ரசிகர்கள் ஆரவாரம்..!

Lekha Shree

கொரோனா தொற்று இருப்பதால் குடும்பத்தினர் கூட பார்க்க முடியாத அவலம்! கே.வி.ஆனந்த் உடலை நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு!

Lekha Shree

கவர்ச்சியின் உச்சத்தில் அனேகன் கதாநாயகி அமைரா தஸ்தூர்! இது கொஞ்சம் ஓவர் தான்…ரசிகர்கள் கிண்டல்…

HariHara Suthan

சாதனை படைத்த சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்! – மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

Shanmugapriya

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா?

malar

ரம்ஜான் அன்று வெளியாகும் ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்…!

Lekha Shree

“இவ்வளவு காஸ்ட்லியா?” – நடிகை கரீனா கபூர் அணிந்து இருந்த மாஸ்கின் விலை என்ன தெரியுமா?

Shanmugapriya

‘தி பேமிலிமேன் 2’ சர்ச்சை… எச்சரித்த சீமான்… சமந்தாவின் வைரல் பதில்..!

Lekha Shree

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree