a

“காத்தாடி மேகம்” எஸ்.பி.பி.யின் மறைவுக்கு பின் வைரலாகும் மெலடி


ஸ்டார் மியூசிக் இந்தியா வெளியிட்டிருக்கும் ஒரு சுயாதீனப் பாட்டில் பாடியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். குட்டி ரேவதி எழுத, விக்னேஷ் கல்யாணராமன் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் ‘காத்தாடி மேகம்’ என்னும் பாடல்தான் அது.

இந்தப் பாடல் சுதந்திரமான இருவர் பற்றியது. ஆண் பாடணும். ஓர் அழகான நீண்ட விடுதலையான பயணத்துக்குத் தன்னுடைய தோழியை அழைக்கிறார். இப்படியாகத்தான் இந்தப் பாட்டுக்கான சூழலை தனக்கு விக்னேஷ் சென்னதாக குட்டி ரேவதி தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் விக்னேஷ் கூறுகையில், இந்த பாடலுக்கான இசையை அமைத்து முடித்தவுடன் எஸ்.பி.பி. சாரின் மேலாளரை இது விஷயமாகத் தொடர்புகொண்டேன். முதலில் சுயாதீனப் பாடல் என்றவுடன் வேண்டாம் என்று தெரிவித்தனர். அதன்பின் நான் பாடலையும் அதற்கான மியூசிக் டிராக்கையும் அனுப்புகிறேன். சார் கேட்கட்டும். கேட்டுவிட்டு என்ன முடிவு எடுத்தாலும் சரி என்று கூறினேன்.

அப்போது எஸ்.பி.பி. சார் அமெரிக்காவுக்கு இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அந்தப் பாடல் வரிகளையும் பாடலுக்கான இசையையும் கேட்டபிறகு, பாடுவதற்குச் சம்மதித்தார். ஆனால், அப்போது இசை நிகழ்ச்சிகளுக்காக உலகின் பல பகுதிகளுக்கும் அவர் சென்றுகொண்டிருந்தார். மூன்று நான்கு மாதங்களுக்குப் பின் அவருடைய சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்று ரத்தானது.

Also Read  கொரோனா பாதிப்பு: மீனவ குடும்பங்களுக்கு உதவும் 'குக் வித் கோமாளி' பிரபலம்!

அந்த இடைவெளியில் அவரின் அலுவலகத்தில் இருந்து எனக்கு எஸ்.பி.பி.சார் அந்தப் பாடலை அனுப்புவதாகத் தகவல் வந்தது. அவரின் வீட்டிலேயே பாடி எனக்கு அனுப்பினார். பாடலின் இரண்டு இடங்களில் எனக்குச் சில வார்த்தைகளை இம்ப்ரூவைஸ் செய்ய வேண்டி இருந்தது. அதையும் நான் கேட்டபடியும் அவருடைய பாணியிலும் இரண்டுவிதமாக இம்ப்ரூவைஸ் செய்த பதிவை எனக்கு அனுப்பி உதவினார். பாடலை அவர் முழுமையாகப் பாடும் காட்சியைத்தான் இந்தப் பாடலில் சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது. ஆனால், அதற்கான படப்பிடிப்பை நடத்துவதற்குள் நிலைமை வேறுவிதமாக முடிந்துவிட்டது.

வெறுமனே அவரின் படங்களைச் சேர்த்து அந்தக் கழிவிரக்கத்தைப் பயன்படுத்தி இந்தப் பாடலை பிரபலப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால், ஒரு நீண்ட பயணத்துக்குத் தயாராகும் காதலர்களை வரைந்து அதை கிராஃபிக்காக இந்தப் பாடலுக்கான காட்சிகளாக்கி, நான் மிகவும் மதிக்கும் எஸ்.பி.பி. சாரின் பிறந்த நாளில் அவருடைய ரசிகர்களின் சார்பாக இந்தப் பாடலை அன்புக் காணிக்கை ஆக்கியிருக்கிறேன் என்றார்.

Also Read  சூப்பர் ஸ்டார் பாடலை பாடி மனைவியை இம்பிரஸ் செய்த தனுஷ்! வைரல் வீடியோ இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாநாடு படத்தின் அப்டேட் குறித்து யுவன் ட்வீட்… ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

யோகி பாபு கால்ஷீட்டுக்காக ஏங்கும் கெளதம் வாசுதேவ் மேனன்! இது வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

சாய் பல்லவி போட்ட ஆட்டத்தை பார்த்து ஆடிப்போன யூ-டியூப்! ஒரே வாரத்தில் படைத்த மாபெரும் சாதனை…!

Lekha Shree

“வலிமை படம் எவ்வாறு இருக்கும்?” – போனி கபூர் ஓபன் டாக்!

Shanmugapriya

கோல்டன் குளோப் விருதுகளில் திரையிடப்படும் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் தனுஷின் ‘அசுரன்’!

Tamil Mint

விஜய்யோடு அடுத்து ஜோடி போடப்போவது யார்?…. 3 ஹீரோயின்களிடையே நடக்கும் போட்டி…!

Tamil Mint

நடிகர் விவேக்கின் கடைசி ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா?

Lekha Shree

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!

Lekha Shree

‘குக்கு வித் கோமாளி’ பவித்ராவுக்கு குவியும் படவாய்ப்புகள்…!

Lekha Shree

நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது பரபரப்பு புகார்..!

Lekha Shree

மற்றுமொரு நட்சத்திர குழந்தையான ஷானயா கபூரை அறிமுகப்படுத்துகிறார் கரண் ஜோகர்..!

HariHara Suthan

நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree