அடுத்த வருட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் யார்..? அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை அணி !!


அடுத்த ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் தோனியே வழிநடத்துவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிங்காக வலம் வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் படு மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் வெறும் 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ப்ளே சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் தொடரில் இருந்தும் வெளியேறியுள்ளது.

 

வழக்கத்திற்கு மாறாக இந்த தொடரில் மிக மட்டமான தோல்விகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்ததால் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியிலும் கடும் விமர்ச்சனத்திற்கும் உள்ளாகியது.

 

Also Read  இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி - இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் மல்யுத்த வீரர் ரவிக்குமார்..!

தோனி உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சீனியர் வீரர்கள் அனைவரும் கழட்டிவிட்டு விட்டு அடுத்த வருடம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

 

இதனால் அடுத்த வருட ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா, விளையாடினாலும் சென்னை அணியை வழிநடத்துவாரா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அடுத்த வருடமும் தோனியே வழிநடத்துவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Also Read  டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா..!

இது குறித்து அவர் பேசுகையில், “அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியையும் தோனியே வழிநடத்துவார் என்பதில் முழு நம்பிக்கையுடன் உள்ளேன். தோனி சென்னை அணிக்காக மூன்று சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவர். நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது இதுவே முதல் முறை, மற்ற எந்த அணியும் இத்தனை முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த வருடம் மோசமானதாக அமைந்துவிட்டதால் அத்தனையையும் மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.

Also Read  நடராஜனுக்கு அறுவை சிகிச்சை…! மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட புகைப்படம்…!

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகள் குறித்து பேசிய காசி விஸ்வநாதன், “இந்த வருடம் நாங்கள் சரியாக விளையாடவில்லை, நாங்கள் வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் கூட தோல்வியடைந்துவிட்டோம். அதுவே எங்களது இந்த நிலைமைக்கு காரணம். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகியதும், தொடர் துவக்கத்தில் அணியின் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்துவிட்டது” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரும் ஐபிஎல் ஏலத்தில் புதிய கேப்டனை எடுக்க முடிவு! ஸ்டீவ் ஸ்மித் விடுவிக்கப்படுகிறாரா?

Tamil Mint

தோனியை பேட்டி எடுத்த தோனி! கலக்கல் வீடியோ இணையத்தில் வைரல்..

HariHara Suthan

மெல்பர்ன்: இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்டில் 195 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

Tamil Mint

சொதப்பிய பெங்களூரு அணி… அசால்டாக வெற்றி பெற்ற கொல்கத்தா அணி.!

suma lekha

“நான் புஜாராவின் தீவிர ரசிகன்” – ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ!

Lekha Shree

விக்கெட் கீப்பிங்களில் சாதனை படைத்த நமன் ஓஜா ஒய்வு – கண்ணீர் மல்க அறிவிப்பு

Tamil Mint

வேஷ்டி, சட்டை,பட்டிமன்றம் என தமிழ் புத்தாண்டை கொண்டாடிய சி.எஸ்.கே அணி வீரர்கள்!

HariHara Suthan

டோக்கியோ ஒலிம்பிக்: குத்து சண்டை காலிறுதியில் சதீஷ் குமார் தோல்வி

suma lekha

வாவ் வேற லெவல்: மிதாலி ராஜின் அடுத்த சாதனை..

suma lekha

கொரோனாவுக்கு குட் பாய் : இந்திய அணியுடன் இணைந்த ரிஷப் பண்ட் ..!

suma lekha

முதல் ஒருநாள் – இந்தியா அசத்தல் வெற்றி!

Devaraj

எங்கடா கேதர் ஜாதவ்? – ஆதரவு குரல் எழுப்பும் ரசிகர்கள்!

Devaraj