‘Squid Game’ 2-வது சீசன் குறித்து இயக்குனர் கொடுத்த சூப்பர் அப்டேட்..! ரசிகர்கள் கொண்டாட்டம்..!


நவம்பர் 8-ம் தேதி நெட்ஃபிக்ஸ்-ன் மெகாஹிட் தொடரான ‘ஸ்க்விட் கேம்’ தொடர் குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு விளம்பர நிகழ்வை நடத்தினர்.

அப்போது அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், ‘ஸ்க்விட் கேம்’ தொடரின் இயக்குநரும் எழுத்தாளருமான ஹ்வாங் டாங் ஹியூக், தொடரின் இரண்டாவது சீசன் கண்டிப்பாக வரும் என கூறியுள்ளார்.

இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமான சியோங் கி ஹன் (லீ ஜங் ஜே), “இரண்டாவது சீசனுக்கு நிறைய தேவை, அழுத்தம் மற்றும் காதல் மக்களிடையே உள்ளது. எங்களுக்கு வேறு வழியில்லை என்பது போல் தெரிகிறது.

அடுத்த சீசன் இப்போது என் தலை மேல் உள்ளது. இந்த நேரத்தில், நான் திட்டமிடல் கட்டத்தில் இருக்கிறேன். அது எப்போது, எப்படி வெளிவரும் என்பது குறித்து மிக விரைவில் கூறுவோம். ஆனால் நான் இதற்கு உறுதியளிக்க முடியும். அதாவது முக்கிய கதாபாத்திரமான ஜி ஹன் திரும்பி வந்து உலகத்திற்காக ஏதாவது செய்வார்” என கூறினார்.

Also Read  இன்ஸ்டாவில் சாதனை படைத்த விஜய் தேவரகொண்டா!

இரண்டாவது சீசனின் சாத்தியம் குறித்து தயாரிப்பு ஊழியர்கள் முன்பே சுட்டிக்காட்டியிருந்தாலும், இயக்குனர் இரண்டாவது சீசனைத் திட்டமிடுவதாக வெளிப்படையாகக் கூறியது இதுவே முதல் முறை.

ஆனால், நெட்ஃபிக்ஸ் அவர்கள் தொடரை மற்றொரு சீசனுக்கு புதுப்பிப்பார்களா என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Also Read  காதலருடன் ஈஸ்டரை கொண்டாடிய நயன்தாரா – காதல் மொழி பேசும் ரொமான்டிக் போஸ்…!

ஸ்க்விட் கேம் வெப்தொடர் முதல் 10 வாரங்களில் நெட்பிளிக்ஸ்-ன் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளின் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருந்தது. இது 3 பில்லியனுக்கும் அதிகமான நிமிடங்கள் பார்க்கப்பட்டதாகவும் நெட்பிளிக்ஸ் கிட்டத்தட்ட $900 மில்லியன் இந்த வெப்தொடர் மூலம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அக்டோபரில், உலகம் முழுவதும் 111 மில்லியன் நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்கள் இந்த வெப்தொடரை பார்த்ததாக நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

கொரிய இயக்குனர் ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான Squid Game என்ற வெப்சீரிஸ் வெளியான 28 நாட்களில் 11 கோடிக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டு நெட்ப்ளிக்ஸ் வரலாற்றில் குறைந்த நாட்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற சாதனையை படைத்துள்ளது.

இப்படி உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும், பலர் இந்த இணைய தொடரில் வரும் காட்சிகளை ரீகிரியேட் செய்து நடித்து டிக்டாக் உள்ளிட்ட பல செயலிகளில் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read  கிருத்திகா உதயநிதி படத்தில் இணையும் 4 பிரபலங்கள்…!

கொரிய நாட்டின் பழமையான சில விளையாட்டுகளை வைத்து ஆட்களை கொல்வதுபோல் உருவான இந்தக் கதைக்களம் பலரை கவர்ந்துள்ளது.

இதனால், இந்த வெப்தொடரின் 2-வது சீசன் வரும் என இயக்குனர் உறுதியளித்துள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினியை கிண்டல் செய்ய நினைத்து சிக்கலில் சிக்கிய பிரபல இயக்குனர்..!

Lekha Shree

நம்ப முடியாத உழைப்பு : ”எதற்கும் துணிந்தவன்” படம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ்

suma lekha

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணையும் விஜய்சேதுபதி-தமன்னா…! வெளியான ப்ரமோ சூட் போட்டோ…!

sathya suganthi

1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு! எங்கு தெரியுமா?

Lekha Shree

வெற்றிமாறன்-கமல்ஹாசன் கூட்டணி? வெளியான ‘வேற லெவல்’ அப்டேட்..!

Lekha Shree

பிரபல நடிகருடன் விஜய் டிவி டிடி-யின் முன்னாள் கணவர்! வைரலாகும் புகைப்படம்…

HariHara Suthan

தலையில் சூட்டியப்பிறகு பறிக்கப்பட்ட மகுடம் – திருமதி அழகி போட்டியில் வெடித்த சர்ச்சை…!

Devaraj

இந்தியாவிற்காக ஒளியூட்டப்பட்ட நயாகரா நீர்வீழ்ச்சி! – கண்கவர் புகைப்படம்

Shanmugapriya

“அண்ணாத்த இன்னொரு திருப்பாச்சியா?” – இணையத்தில் வைரலாகும் மீம்..!

Lekha Shree

அமீர் கான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் இந்த நடிகரா?

Lekha Shree

மகளின் பெயரில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்… கடுப்பான நடிகர் நகுலின் மனைவி..!

suma lekha

ஆர்யா – விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனிமி’ படத்தின் டீசர் நாளை வெளியீடு…!

Lekha Shree