a

ஐதராபாத்க்கு வந்த சோதனை – சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற டெல்லி அணி!


சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா – ஷிகர் தவான் ஜோடி களம் இறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு முனையில் ஷா அதிரடி காட்ட மறுமுனையில் ஷிகர் தவான் நிதானமாக விளையாடினார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவான் 26 பந்துகளில் 28 ரன்கள் விளாசி ரஷீத் கான் பந்து வீச்சில் போல்டு ஆனார். அவரை தொடர்ந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த ப்ரித்வி ஷாவும் 39 பந்துகளில் 53 ரன்கள் விளாசி ரன் அவுட் ஆனார்.

பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் ரிஷப் பண்டுடன் இணைந்து ரன்களை குவிக்கத் தொடங்கினார். ரிஷப் பண்ட் 37 ரன்கள் விளாச, ஹெட்மையர் ஒரு ரன்னிலும் நடையை கட்டினார். ஸ்டீவ் ஸ்மித் கடைசி நேரத்தில் அதிரடியாக 34 ரன்கள் சேர்த்தார்.

Also Read  இனி நான் தான் ஓப்பனர் - கோலியின் அதிரடி அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்!

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரரும் கேப்டனுமான டேவிட் வார்னர் 6 ரன்களில் ரன் அவுட் ஆக பேர்ஸ்டோ வில்லியம்சன் ஜோடி பொறுப்புடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது.

பேர்ஸ்டோ 18 பந்துகளில் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் விளாசி மிரட்டினார். அவரை தொடர்ந்து வந்த வினை சிங் 14 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். விஜய் சங்கர், கேதர் ஜாதவ், ஷர்மா, ரஷீத் கான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.

Also Read  டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் உயிரிழப்பு…!

கேன் வில்லியம்சன் கடைசி வரை பொறுப்புடன் விளையாடி 51 பந்துகளில் 8 பவுண்டரிகள் 66 ரன்கள் குவித்தார். கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டம் இறுதியில் சமனில் முடிந்தது. ஐதராபாத் அணியின் அறிமுக வீரரான சுஜித் அட்டகாசமாக விளையாடி 6 பந்துகளில் ஒரு சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் விளாசினார். இதையடுத்து சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சூப்பர் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் கேன் வில்லியம்சன் களம் இறங்கினர்.

ஜானி பேர்ஸ்டோ மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு தரப்படாதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லி அணி தரப்பில் சூப்பர் ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். 6 பந்துகளை துல்லியமாக வீசிய அவர் வெறும் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார். ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே கிடைத்தது.

Also Read  ஏறுமுகத்தில் கொரோனா - வார இறுதியில் ஊரடங்கு..!

9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் கேப்டன் பண்ட், ஷிகர் தவான் ஆகியோர் சவாலை எதிர்கொள்ள தயாராகினர்.

ரஷீத் கான் சூழலில் டெல்லி அணி நிதானமாக ஆட இரு முறை ரிவ்யூ எடுக்கப்பட்டது. கடைசி பந்து வரை ஆட்டம் சென்றது. இறுதியில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் பெங்களூரை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐதராபாத் அணி ஏழாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

HariHara Suthan

தோனிக்கு 12 லட்சம் அபராதம் – சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சோதனை!

Jaya Thilagan

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு ஒரு நல்ல செய்தி!

Devaraj

ஐபிஎல் 2021: தோனி அண்ட் கோ டீம் படைக்க உள்ள சூப்பர் சாதனைகள்!

Lekha Shree

சதத்தால் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

Devaraj

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சமாளிக்குமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?

Lekha Shree

கொல்கத்தாவை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Devaraj

ஒரு ரன்னில் டெல்லி கேப்பிடல்ஸ் தோல்வி – அதிர்ச்சி கொடுத்த ஆர்.சி.பி.

Jaya Thilagan

மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி!

Devaraj

சென்னை சூப்பர் கிங்சுக்கு மற்றும் ஒரு வாய்ப்பு – சென்னையை சமாளிக்குமா ஐதராபாத்?

Jaya Thilagan

சொந்த ஏற்பாட்டில் ஆஸ்திரேலியா வாருங்கள் – ஐபிஎல் வீரர்களுக்கு ஆஸி., பிரதமர் அட்வைஸ்

Lekha Shree

நடப்பு ஐபிஎல் தொடரில் யாரிடம் இருக்கிறது ஆரஞ்சு கேப்?

Jaya Thilagan