பிரித்வி ஷா, இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தை பாராட்டிய முரளிதரன்…!


இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36.3 ஓவர்களில் வென்றதற்கு பிரிதிவி ஷா, இஷான் கிஷனின் அதிரடி ஆட்டம் தான் காரணம் என முன்னாள் இலங்கை ஸ்பின் பவுலர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.

இந்திய நட்சத்திர ஆட்டக்காரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இல்லாமல் களமிறங்கிய இளம் இந்திய அணி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.

டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட இந்திய அணி எப்படி இலங்கை அணி எதிர்கொள்ளும் என பலராலும் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விகளுக்கு எல்லாம் தங்கள் பந்துவீச்சிகளாலும் பவுண்டரிகளாலும் பதில் கூறியுள்ளனர் இளம் இந்திய அணியினர்.

Also Read  சுரேஷ் ரெய்னா பயோபிக்கில் நடிகர் சூர்யா?

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது.

263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணி சார்பில் பிரிதிவி ஷா 24 பந்துகளில் 44 ரன்களையும் இஷன் கிஷன் 33 பந்துகளில் 59 ரன்களை எடுக்க 18வது ஓவர் முடிவதற்குள்ளேயே இந்திய அணி 143 ரன்கள் எடுத்துவிட்டது.

Also Read  3வது டி20 - வெற்றி பயணத்தை தொடருமா இந்தியா?

இதுகுறித்து கூறுகையில் முத்தையா முரளிதரன், “இலங்கை அணியிடம் ஒரு வேகம் இருந்தது. 210 -220 தான் எடுப்பார்கள் என்ற நிலையிலிருந்து 272 ரன்கள் எடுத்தனர்.

பிரித்வி ஷா அச்சமற்று ஆடக்கூடியவர். முதல் ஓவரில் அவர் விக்கெட்டை எடுத்திருக்க வேண்டும். இஷன் கிஷன் அவர் போலவே அதிரடியாக ஆடினார்.

Also Read  31 பந்துகளில் 70 ரன் - நியூசிலாந்தை வெச்சு செஞ்ச ரியல் பவர் ஹீட்டர் கிளன் மேக்ஸ்வல்

10 ஓவர்களில் 90 ரன்கள் என்பது அசாத்திய தொடக்கம். இலங்கை அணியின் பந்து வீச்சு மிக மிக சாதாரணமாக சராசரிக்கும் கீழே இருந்தது” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புது மாப்பிள்ளை ஜஸ்பிரித் பும்ராவின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

Jaya Thilagan

யூரோ கால்பந்தாட்ட இறுதி போட்டி… வெற்றியாளரை கணித்த புலி..!

Lekha Shree

ஒலிம்பிக் தொடரில் 50% இருக்கைகளுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி…!

Lekha Shree

கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த பிசிசிஐ!

Lekha Shree

மொயின் அலியை படுமோசமாக விமர்சித்த தஸ்லிமா நஸ்ரின் – வலுக்கும் கண்டனங்கள்!!

Jaya Thilagan

சென்னை டெஸ்ட்: 6 விக்கெட்டுகள் இழந்து இந்தியா தடுமாற்றம்! சொதப்பிய கோலி… அசத்திய ரோஹித்…!

Tamil Mint

”மனசு வலிக்கிறதுடா சாரி” அந்நியன் மீம் போட்டு மஞ்ரேக்கரை கலாய்த்த அஷ்வின்!

sathya suganthi

எல்லாம் சரிதான் ஆனால் நாட்டுக்காக விளையாடுறது ரொம்ப முக்கியம் பாஸ் – இங்கிலாந்து கிரிக்கெட் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட்!

Jaya Thilagan

டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இடம் பெற விரும்பும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்!

Tamil Mint

ஐபிஎல் மும்பை VS கொல்கத்தா போட்டி! பங்கமாக கலாய்த்த சேவாக்…

HariHara Suthan

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குவாரா நடராஜன்?

Tamil Mint

இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ஹைட்ராபாத் அணி வென்றது. குவாலிபயர் போட்டிக்கு முன்னேறியது

Tamil Mint