a

ஓய்வு பெற்றார் பெரேரா!


இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும் முன்னாள் கேப்டனுமான திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு தனது 20 வயதில் இலங்கை அணியில் அறிமுகம் ஆனார் பெரேரா.

ஜெயசூர்யா, ஜெயவர்தனே, முரளிதரன், தில்ஷன் உள்ளிட்ட முன்னணி வீரர்களுடன் விளையாடியுள்ள பெரேரா உலகக்கோப்பை தொடரிலும் ஆடும் லெவனில் பங்கேற்று ஆடியுள்ளார்.

Also Read  இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி!

பெரேரா இலங்கை அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். கேப்டனாகவும் இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்தினார்.

இதுவரை 166 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பெரேரா 2338 ரன்களும், 175 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1204 ரன்களையும், 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திசாரே பெரேரா திடீரென அறிவுப்பு வெளியிட்டார்.

Also Read  இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸுக்கு அறுவை சிகிச்சை…! ஐபிஎல் 2021 போட்டிகளில் இருந்து விலகல்!

இளம் வீரர்களுக்கு வழி விடவும், அதிக திறமை கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவும் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இனி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறிய அவர், தனக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பெரேராவின் திடீர் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read  விஜய் ஹாசரே கோப்பை – ஆந்திர அணியிடம் வீழ்ந்த தமிழக அணி

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற பெரேராவுக்கு இலங்கை வீரர்கள் உள்பட சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் எதிர்காலம் சிறக்க வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாழ்வா சாவா ஆட்டம்! – சவாலை சமாளிக்குமா இந்திய அணி?

Lekha Shree

விராட் கோலியை தூக்கும் அனுஷ்கா சர்மா…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

ஐபிஎல் மும்பை VS கொல்கத்தா போட்டி! பங்கமாக கலாய்த்த சேவாக்…

HariHara Suthan

ஐபிஎல் முக்கியமா – சாகித் அப்ரிடி விமர்சனம்!

Jaya Thilagan

ஐபில் போட்டி: “எங்களையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்” பஞ்சாப் முதல்வரின் கோரிக்கை!

Jaya Thilagan

கெத்தா விளையாடிய யுனிவர்சல் பாஸ் – அதிக சிக்சர்களை குவித்து சாதனை!

Devaraj

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Tamil Mint

இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறும் ஆஸ்திரேலியா… இறுதி டெஸ்ட் போட்டி அப்டேட் இதோ!

Tamil Mint

வேணும்னு பண்ணல.. மொகாலியில் ஐபிஎல் நடத்தாததற்கு இதுதான் காரணம்! வாய்திறந்த பிசிசிஐ

Jaya Thilagan

தோனி முன் பவ்வியமாக நின்ற விராட் கோலி – பவர் பிளேயில் மாஸ் காட்டிய சென்னை அணி!

Devaraj

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்… களத்தில் நின்று ஆடும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்!

Tamil Mint

நெய்மருக்கு கொரோனா, அதிர்ச்சியில் அணி

Tamil Mint