“நீங்கள் பார்ப்பது கொஞ்சம் தான்!” – சர்வைவர் ஷோவில் இருந்து வெளியேறிய ஸ்ருஷ்டியின் முதல் பதிவு..!


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சாகச ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியுள்ள நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தனது இன்ஸ்டாகிராமில் இந்நிகழ்ச்சி குறித்து பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ்-க்கு போட்டியாக களம் இறங்கி இருக்கும் சர்வைவர் ஷோ தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை தந்துள்ளனர்.

தமிழ் திரை துறையின் முன்னணி பிரபலங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

அதில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே கடந்த வார எபிசோடடில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்படும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெரிய பதிவை பகிர்ந்துள்ளார்.

Also Read  'சீயான்60' படத்தில் இணைந்த 'தேசிய விருது' பெற்ற நடிகர்…!

அதில், “டார்லிங்ஸ்… சர்வைவர் நிகழ்ச்சி ஒரு சாதாரண ரியாலிடி ஷோவாக இருக்கலாம். ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமானால் நீங்கள் டிவியில் பார்ப்பது கொஞ்சம் தான். அங்கு நிறைய நடக்கிறது.

ஒரு பழமையான வாழ்க்கை முறையை வாழ்வது என்பது எளிதான ஒன்றல்ல. தற்போது விளையாட்டில் இருக்கும் ஒவ்வொரு சக போட்டியாளர்களுக்கும் நான் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சி பெரும் சவால்கள் நிறைந்த கடினமான நிகழ்ச்சி. மிகவும் வசதியான மற்றும் சௌகரியமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு திடீரென பழமையான வாழ்க்கைக்கு மாறும் பொழுது அது உங்கள் உடலையும் மனதையும் கடுமையாக பாதிக்கும்.

கூடுதலாக குடும்பத்தைவிட்டு தனிமைப்படுத்தப்பட்டு உங்களுக்கு தெரியாத நபர்களுடன் பணிபுரிவது என்பது மிகவும் கடினமானது.

Also Read  'சார்பட்டா பரம்பரை' - சூப்பர் அப்டேட் தெரிவித்த இயக்குனர் பா.ரஞ்சித்..!

இந்நிகழ்ச்சியில் நான் நினைத்த இடத்தை அடைய முடியாமல் இருக்கலாம். ஆனால் நான் நினைத்த இடத்திற்கு வந்து விட்டேன் என்று நினைக்கிறேன்.

சர்வைவர் நிகழ்ச்சியில் நான் கற்றுக்கொண்ட ஒரு அற்புதமான விஷயம் என்னவென்றால் சின்ன சின்ன விஷயங்களையும் நாம் பாராட்ட வேண்டும்.

நமக்கு ஒரு கருத்து இருக்கும். பார்வை இருக்கும். அதை வைத்து மட்டுமே நாம் யோசிப்போம். மற்றவர் பார்வையில் அதை நான் யோசிக்க மாட்டோம். தோல்வி என்பது உண்மையில் தோல்வி கிடையாது. அது நமக்கு அனுபவம்.

நான் சர்வைவரில் இருந்து வெளியேறியதை ஒரு தோல்வியாக உணரவில்லை. இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த அனுபவத்தை என்னால் உண்மையில் மறக்க முடியாது.

Also Read  நடிகை காஜல் அகர்வாலின் 'Anu and Arjun' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!

நிறைய வலி, கண்ணீர், மகிழ்ச்சி, போராட்டம் என பலவிதமான உணர்வுகளை கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ தான் இது.

ஒரு பயணத்தின் முடிவு என்பது மற்றொரு பயணத்திற்கான தொடக்கம். உங்கள் அன்பு, பிரார்த்தனை, ஆதரவு மற்றும் இனிய மீம்ஸ்கள் அனைத்திற்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் லாட்ஸ் அப் லவ்.

இந்த வாய்ப்பை தந்ததற்கு அர்ஜுன் சாருக்கு நன்றி. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவர் ஒன்றை கூறியிருந்தார். அது “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு”. அது உண்மைதான்” என பதிவிட்டுள்ளார்.

தற்போது சர்வைவர் நிகழ்ச்சி 15 போட்டியாளர்களுடன் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ஜகமே தந்திரம்’ மூவி ரிவ்யூ: படம் எப்படி இருக்கு? ஓர் அலசல்!

Lekha Shree

Mission impossible ஷூட்டிங்கிற்காக வந்த டாம் குரூஸ்: அவரது கார் மற்றும் உடைமைகளை திருடிய திருடர்கள்.!

mani maran

‘பிகில்’ பட நடிகரின் மகனுடன் பிரபல நடிகைக்கும் விரைவில் திருமணமா?… தீயாய் பரவும் செய்தி

HariHara Suthan

தாதா சாகேப் பால்கே விருது – நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்…

HariHara Suthan

பிரபாஸின் பிறந்தநாளுக்கு சிறப்பு டீசர்: படக்குழுவின் மெகா சர்ப்ரைஸ்!

mani maran

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் பிரபல டோலிவுட் ஹீரோ?

Lekha Shree

கொரோனா தொற்றால் மனைவியுடன் இணைந்த பேட்ட வில்லன்!

HariHara Suthan

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்

Devaraj

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் கதாநாயகி இவரா? வைரலாகும் புகைப்படம்..!

Lekha Shree

அயலான் படப்பிடிப்பு நிறைவு… கொண்டாட்டத்தில் படக்குழு!

Tamil Mint