a

மெஜாரிட்டி திமுக…! ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழா…!


தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராகிறார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களை பிடித்துள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக மட்டும் 125 தொகுதிகளில் வாகை சூடி தனிபெருமான்மையுடன் உள்ளது. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றனர்.

Also Read  விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி இல்லை: மருத்துவமனை அறிக்கை

அதிமுக கூட்டணிக்கு கிடைத்த 75 தொகுதிகளில் அக்கட்சி மட்டும் 63 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னிர்செல்வம் உள்ளிட்டோர் அக்கட்சியில் வெற்றி பெற்றனர்.

பாஜக தலைவர் தலைவர் எல்.முருகன், தாராபுரம் தொகுதியில் தோல்வியடைந்தார். முதலமைச்சர் வேட்பாளர்கள் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தோல்வியடைந்தனர். விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார் .

Also Read  வெறும் 261 வாக்குகள் தான் வித்தியாசம்.. கரூரில் டஃப் கொடுக்கும் செந்தில்பாலாஜி..

இந்நிலையில் வெற்றி சான்றிதழை திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் வைத்து வணங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், திமுகவின் வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி என்றும் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் என்றும் கூறினார்.

10 ஆண்டுகள் அடிப்படையில் வெளியிடப்பட்ட 7 அறிவிப்புகள் நிறைவேற்றப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Also Read  திருப்பதி கோயிலில் நள்ளிரவில் பக்தர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

கொரோனா பரவல் காரணமாக பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

7 பேர் விடுதலையில் இழுபறி: ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என முதலமைச்சர் பேச்சு!

Tamil Mint

“அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்”: சீமான்

Tamil Mint

கொரோனா வார்டில் இருந்து தப்ப முயன்ற பெண் பலியான பரிதாபம்

Tamil Mint

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் – மத்திய அரசு

Tamil Mint

முதலமைச்சராக மீண்டும் பழனிசாமியை அமர்த்துவதுதான் பாஜக நோக்கம் – அண்ணாமலை

Tamil Mint

உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலினுடன் கண்டுகளித்த ராகுல் காந்தி

Tamil Mint

வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை

Tamil Mint

பிரதமரின் சென்னை வருகைக்கு முதல் எதிர்ப்பு… ட்விட்டரில் #GoBackModi என பதிவிட்ட பிக்பாஸ் ஓவியா…!

Tamil Mint

CBSE பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் புரோஹிதர் போல் சித்தரிப்பு! – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

Shanmugapriya

டில்லி லோக்பாலில் புகார் – வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சிக்குமா துணை முதல்வர் ஓபிஎஸ் குடும்பம்!

Tamil Mint

அண்ணா பல்கலை., முன் திமுக இளைஞரணி நாளை ஆர்ப்பாட்டம்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை? தரவுகளை சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Tamil Mint