a

இவர்களுக்கு தான் அமைச்சர் பதவி.. ஸ்டாலின் முடிவால் அப்செட்டில் திமுக சீனியர்கள்..


தமிழகத்தில் கடந்த மாதம் 6-ம் தேதி சட்டப்பேரவை வாக்குப்பதிவு நடைபெற்றது.. அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் காத்திருக்கும் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை போலவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள திமுக தலைமை, ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்கும், நேரம், இடம் ஆகியவற்றை இறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதே போல ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்பது பற்றியும் விவாதம் நடைபெற்று இறுதி செய்யப்பட்டு விட்டதாம்.

Also Read  "ஸ்டாலினை தேர்தலில் பாஜகவின் சாதாரண தொண்டரே தோற்கடிப்பார்!" - கராத்தே தியாகராஜன்

இந்த சூழலில் நேற்று மு.க ஸ்டாலின் தலைமையில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம் வழங்கப்படும் என்று ஸ்டாலின் ஹிண்ட் கொடுத்துள்ளார்.

அதாவது நேற்றைய கூட்டத்தில் ஸ்டாலின் ஒரு சில மாவட்ட செயலாளர்களை மட்டும் பெயர் சொல்லி அழைத்து அவர்களிடம் கூடுதல் விவரங்களை கேட்டாரம்.

மேலும் இந்த கூட்டம் முடிந்த பிறகு, ஒரு சில மாவட்ட செயலாளர்களை ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசியதாகவும் தெரிகிறது.

அந்த வகையில் யாரை எல்லாம் தொலைபேசியில் அழைத்து பேசினாரோ அவர்கள் அனைவரும், தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போவது உறுதி என்ற மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.

Also Read  அமைச்சர் கார் மீது சரவெடியை தூக்கி வீசி அட்டகாசம் செய்த அமமுகவினர்…!

அமைச்சரவை, இலாகாக்காள் குறித்து தான் ஸ்டாலின் அவர்களிடம் பேசினாராம்.. ஆனால் அதே நேரத்தில் கடந்த திமுக ஆட்சி காலங்களில் அமைச்சர்களாக இருந்த பலரிடம் ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசவில்லையாம்.

கலைஞர் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ஒரு சிலரை மட்டுமே ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Also Read  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் முறையாக முழுமையாக நடத்தப்படும் -மு.க.ஸ்டாலின்

எனவே இந்த முறை ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சீனியர்களை விட, புதிய முகங்களுக்கு அமைச்சர் வாய்ப்பு கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.. கல்வித்துறை, நிதித்துறை, சுற்றுச்சூழல் போன்ற துறைகள் சீனியர்களுக்கு ஒதுக்கவும், சுகாதாரம் போன்ற முக்கிய துறைகள் அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு ஒதுக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாங்கள் மிட்டாய் கொடுக்கிறோம் என்றால் நீங்கள் என்ன அல்வா கொடுக்கிறீர்களா? – ஸ்டாலின் காட்டம்!

Lekha Shree

தமிழக தேர்தல் முடிவுகள்.. எந்தெந்த அமைச்சர்கள் முன்னிலை..? யாரெல்லாம் பின்னடைவு..?

Ramya Tamil

ஜனவரி 10 வரை கிராமசபை கூட்டங்கள் நடக்கும்: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

“நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” – சசிகலா திட்டவட்டம்!

Tamil Mint

சேப்பாக்கம் தொகுதியில் தாத்தாவின் பெயரை காப்பாற்றுவாரா உதயநிதி ஸ்டாலின்?

Lekha Shree

பணம் கேட்டு தாய் நெருக்கடி – மகன், மகள்களை கொன்று தம்பதி தற்கொலை…!

sathya suganthi

“திமுக போகாத ஒரே கடை சாக்கடை தான்!” – நடிகை விந்தியா கடும் விமர்சனம்!

Shanmugapriya

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

Tamil Mint

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டங்கள்… அதிருப்தியை வெளிப்படுத்திய கோர்ட்!

Tamil Mint

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Lekha Shree

விஜய் ரசிகர்கள் என்மீது கோபப்பட்டு என்ன நடக்கப் போகிறது? சீமான்

Tamil Mint