a

கோவையை திமுக அரசு புறக்கணிக்கிறதா ? முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன பதில்…!


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை என்ற காரணத்தால், கொரோனா தடுப்புப் பணிகளில் கோவை புறக்கணிக்கப்படுகிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 10ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் அதிக அளவிலான பரிசோதனைகளை செய்து வருகிறோம் என்றும் இதுவரை கோவை மாவட்டத்தில் 5,85,713 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

தாங்கள் ஆட்சி பொறுப்பேற்று கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 1,51,061 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது என்றும் கோவை மாவட்டம் மட்டுமின்றி எந்த மாவட்டத்திலும் படுக்கை வசதி இல்லை என்கின்ற நிலை இல்லை என்ற நிலைதான் தற்போது உருவாகி இருக்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Also Read  45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி - தமிழக அரசு அதிரடி உத்தரவு

கொரோனா தடுப்பு பணிகளில் கோவை புறக்கணிக்கப்பட்டதாக சிலர் புகார்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என நானும் கேள்விப்பட்டேன் என்று கூறிய அவர், அவர்களுக்கு அரசியல் ரீதியாக பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர்கள் அரசியல் நோக்கத்தோடு கருத்துக்களைச் சொல்லலாம், ஆனால் தான் அவர்களுக்கு தெளிவாக சொல்ல விரும்புவது தாங்கள் உருவாக்கி வைத்திருக்கக்கூடிய கட்டமைப்பு வசதிகளை அவர்கள் நேரடியாக பார்வையிட வேண்டும் என்றும் அப்படி பார்வையிட்டால் இந்த விமர்சனத்தை அவர்கள் வைக்க மாட்டார்கள் என நம்புகிறேன் என்றும் கூறினார்.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்றும் கோவை மட்டுமல்ல எல்லா ஊரும், எங்கள் ஊர்தான். எந்த பாரபட்சமும் பார்க்கப்படுவதில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Also Read  சூடுபிடிக்கும் தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக அமைச்சர்கள் அவசர ஆலோசனை

Tamil Mint

PSBB பள்ளி விவகாரம் – ஆளுநருக்கு சுப்பிரமணியண் சுவாமி கடிதம்!

Lekha Shree

‘தமிழர்கள்’ முதல் ‘இந்துக்கள்’ வரை: திமுக தேர்தல் அறிக்கையில் கோயில்கள்…! பா.ஜ.க.வுக்குக் கிடைத்த பாதி வெற்றியா?

Devaraj

உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட சீமான்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

துரைமுருகன், ஜெயக்குமார் இல்லாத சட்டமன்றமா?

Devaraj

காதல் திருமணம் வழக்கில் அதிமுக எம்எல்ஏவுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Tamil Mint

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய முகாம்

Tamil Mint

திமுக பொருளாளர் பதவிக்கு நாங்கள் போட்டியிடப் போவதில்லை, ராசா, கனிமொழி அறிவிப்பு

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று ஆலோசனை!

Lekha Shree

வெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்!

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi

டாப் 5 வின்னர்ஸ்…! அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…!

sathya suganthi