a

ஆட்சியமைக்க உரிமை கோர நாளை ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்..


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களில் அமோக வெற்றி பெற்றதன் மூலம், திமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலினுக்கு வரும் 7-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

Also Read  மோடியை பின்னுக்கு தள்ளி யூடியூப்பில் சாதனை படைத்த ஸ்டாலின்!

இதற்காக அக்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இதைத் தொடர்ந்து நாளை மாலை 6.30 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார்.

Also Read  பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்கள் - மு.க.ஸ்டாலின்

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக வரும் 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழா எளிய முறையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.. இந்த விழாவில் 200 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளதாக தெரிகிறது..


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

`செய்வது நாங்களாகவே இருப்போம்’ – கனிமொழிக்கு அதிமுக பதில்

Tamil Mint

தமிழக அரசின் பொங்கல் பரிசு இன்று முதல் விநியோகம்

Tamil Mint

டாப் 5 வின்னர்ஸ்…! அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…!

sathya suganthi

சசிகலாவை சந்திக்கும் பிரபலங்கள் – எம்எல்ஏக்களும் சந்திக்கப்போகும் தகவலால் அ.தி.மு.க. அதிர்ச்சி

Jaya Thilagan

கொரோனா பரவல் எதிரொலி – திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!

Lekha Shree

சென்னை Vs கோவை: யார் முட்டாள் என ட்விட்டரில் மோதல்!

Lekha Shree

பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்துக்கு மம்தா பானர்ஜிக்கு தடை!

Shanmugapriya

தமிழக சட்டமன்ற தேர்தலால் தள்ளிப்போகும் முன்னணி நடிகர்களின் படங்கள்?

Lekha Shree

ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகிறார் சசிகலா; உறுதிப்படுத்திய ராஜா செந்தூர் பாண்டியன்

Tamil Mint

சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Tamil Mint

“கொரோனா தடுப்பூசிக்கு பயப்பட வேண்டாம்” – மு.க.ஸ்டாலின்

Shanmugapriya

“மத்திய அரசின் திட்டங்களைத்தான் தொலைநோக்கு திட்டமாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்!” – எல்.முருகன்

Shanmugapriya