ஸ்டாலினுக்கு ஒன்றுமே தெரியவில்லை…. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…..


திறமையான அரசாங்கம் இல்லாததால் தான் தண்ணீர் தேங்கி உள்ளது என்றும் அதனை மறைக்க தான் அதிமுக அரசை தி.மு.க குறை கூறி வருவதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

பெருமழையால் பாதிக்கப்பட்ட சென்னையின் தாம்பரம், கீழ்கட்டளை, தரமணி, வேளச்சேரி, மைலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மைலாப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி,  அதிமுக ஆட்சி காலத்தில், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது என்றார்.

Also Read  ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்... பெண்களுக்கு 1500 ரூபாய்... அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி!

தி.நகரில் தண்ணீர் தேங்குவதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் தான் காரணம் என ஒரு பொய்யான குற்றச்சாட்டை முதலமைச்சர் கூறி வருகிறார். திமுக அரசு திட்டமிட்டு செயல் படாத காரணத்தால் தான் தி.நகரில் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னை மாநகரில் முறையாக தூர் வாரபடவில்லை என்றும், வடிகால் பணிகளை முறையாக செய்யவில்லை என்று குற்றச்சாட்டினார்.

புதியதாக அதிகாரிகளை நியமித்து உள்ளதால், இந்த நீரை எவ்வாறு வெளியேற்ற வேண்டும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. முறையாக அரசு செயல்படாததே இந்த அவலநிலைக்கு காரணம். ஸ்டாலின் சென்னை மேயராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்து உள்ளார். ஆனால் அவருக்கு எவ்வாறு இந்த நேரத்தில் செயல்பட வேண்டும் என்று தெரியவில்லை

Also Read  தமிழகம்: தொடரும் கனமழை…! 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..!

ஸ்மார்ட் சிட்டி சரியாக செயல் பட்டது என்று மத்திய அரசே பாராட்டு தெரிவித்து உள்ளது. உள்ளாட்சி துறையில் சிறப்பாக பணியாற்றியதால் தான், மத்திய அரசு உட்பட 140 விருதுகளை பெற்று உள்ளோம். கடுமையாக மக்கள் பாதித்து உள்ள நிலையில் உடனடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நியாய விலை கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பல இடங்களில் மின்சாரம், பால், உணவு இல்லாத அவல நிலை உள்ளது. இனியாவது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு உரிய நிவாரண  நிதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read  ஹெலிகாப்டரில் வந்த கமல்... பார்க்க குவிந்த மக்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கேரளாவில் பாஜக வளராததற்கான காரணம் இதுதான்” – ஒப்புதல் அளித்த பாஜக எம்.எல்.ஏ!

Shanmugapriya

தமிழகத்தில் 3 மாவட்டங்களை அச்சுறுத்தும் “டெல்டா பிளஸ்” – மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு

sathya suganthi

“முந்தைய ஆட்சியின் தவறான நிர்வாகம்” – ஆளுநர் உரையின் முழு தொகுப்பு…!

sathya suganthi

பணமோசடி வழக்கு – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் கைது..!

Lekha Shree

‘சசிகலா 2.0!’ – ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா..! பாதுகாப்பு கேட்டு மனு..!

Lekha Shree

இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது – தமிழக தேர்தல் ஆணையம்

Tamil Mint

மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #தொடை_நடுங்கி_அண்ணாமலை ..! நடந்தது என்ன?

Lekha Shree

ஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து

Tamil Mint

“என் தம்பி முதலமைச்சராக பதவியேற்பதில் பெருமை” – மு.க. அழகிரி

Lekha Shree

தமிழகத்தில் 2,200-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

டிரெண்டிங்கான #செந்தில்னேசாப்ட்டியா ஹாஷ்டேக்…! யாரை குறி வைக்கிறார்கள் தம்பிகள்…!

Devaraj