a

முழு ஊரடங்கை நீட்டிக்க முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவலை தடுக்க கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஜூன் 7 வரை இந்த தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் முழு ஊரடங்கு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலை தடுத்திட முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read  அடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…! இளைஞருக்கு பாதிப்பு…!

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என்றும் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் அதிகமாக இருந்த கொரோனா தற்போது குறைந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மளிகை பொருட்களையும் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளது என தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், முழு ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது என்றும் அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Also Read  தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 09.10.20

கொரோனா 2வது அலை தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பிற்கும், நிதிநிலைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனாவை வெல்வோம்; நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Also Read  7 பேர் விடுதலையில் இழுபறி: ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என முதலமைச்சர் பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் செல்கிறார் தமிழக முதலமைச்சர்

Tamil Mint

அதிமுக-திமுக: கட்சி தாங்க வேற…! ஆன தேர்தல் அறிக்கை ஒன்னுதான்…! – நெட்டிசன்கள் கலாய்…!

Devaraj

தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்ட போகும் லாக் டவுன்

Tamil Mint

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி – தமிழக அரசு அதிரடி உத்தரவு

Devaraj

சென்னையில் 161 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை, கோவில்கள், பூங்காக்கள் திறப்பு

Tamil Mint

வேஷ்டி, சட்டை,பட்டிமன்றம் என தமிழ் புத்தாண்டை கொண்டாடிய சி.எஸ்.கே அணி வீரர்கள்!

HariHara Suthan

காவல்துறையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை…..மகன் புகார்….

Devaraj

ராமேஸ்வரம் கோயில் கருவறைக்குள் செல்ல விஜயேந்திரருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? முழு விவரம்!

Bhuvaneshwari Velmurugan

பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்… தொடரும் பேச்சுவார்த்தை…

Tamil Mint

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்த மழை இன்று இரவிலும் தொடர்கிறது

Tamil Mint

ஓபன் த டாஸ்மாக் மா: சென்னை குடிமகன்களை குஷிப்படுத்த தயாராகும் மதுக்கடைகள்

Tamil Mint

லஞ்சப் புகாரில் மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் கைது: ஒப்பந்ததாரர்களும் கையும் களவுமாக சிக்கினர்

sathya suganthi