யார் இந்த ஸ்டேன் சாமி? இவர் கைதாக என்ன காரணம்? நாடு முழுவதும் இவர் இறப்பை பற்றி பேசுவது ஏன்?


மறைந்த ஸ்டேன் சாமி எதற்காக UAPA-வில் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மராட்டிய பேஷ்வா படைகளை, ஆங்கிலேயர்களுடன் இணைந்து தலித் படைவீரர்கள் வெற்றிகொண்ட இடம், மகாராஷ்டிரா மாநிலம் பீமா கொரேகான்.

இவ்விடத்தில் அம்பேத்கர் சென்று அஞ்சலி செலுத்தியதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இங்கு 2017-ம் ஆண்டு எல்கார் பரிசத் (Elgar Parishad) என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி மாவோயிஸ்ட் சார்புடையவர்களால் நடத்தப்பட்டுள்ளதாக கூறி, ஓராண்டு கழித்து 2018 ஜூன் மாதத்தில், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை UAPA சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டனர்.

சுரேந்திர காட்லிங், ரோனா வில்சன், சுதிர் தவாலே, மகேஷ் ராவத், சோமா சென் ஆகிய ஐந்து பேர் முதலில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் இந்தியாவின் மதிப்பு மிக்க சமூக செயற்பாட்டாளர்கள். இவர்களுடன் இணைத்து, அந்த எல்கர் பரிசத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ‘கபீர் கலா மஞ்ச்’ கலைக்குழுவைச் சேர்ந்த சாகர் கோர்கே, ரமேஷ் கைச்சார், ஜோதி ஜாக்டாப் ஆகிய மூவரும் UAPA-வில் கைது செய்யப்பட்டனர்.

Also Read  அலுவலகம் கூட இல்லாத நிறுவனம்… இந்தியாவில் ரூ.36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம்..!

பின்னர், இவர்களின் கைதை கண்டித்த, மனித உரிமை வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் இதே UAPA சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டார்.

இவருடன் சேர்த்து, கவிஞர் வரவரராவ், வெர்னன் கல்சால்வெஸ், கௌதம் நவ்லக்கா, அருண் ஃபெரைரா போன்றோரும் கைது செய்யப்பட்டனர்.

இதில் கௌதம் நவ்லக்கா EPW-ன் ஆசிரியராக இருந்தவர். இந்த ஐந்து பேரும் 2018 ஆகஸ்டில் கைது செய்யப்பட்டனர்.

மொத்தமாக இவர்களை ‘Urban Naxals’ என அரசு குற்றம்சாட்டியது . 2019 பிப்ரவரியில் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, பீமா கொரோகான் வழக்கில் 14-வது நபராக கைது செய்யப்பட்டார்.

வீடுபுகுந்து தீவிரவாதி போல சித்தரித்து இவரை NIA அழைத்துச் சென்றது.
2020ம் ஆண்டு மே மாதத்தில் ஸ்டேன் சாமி அவரது 83 வயதில், ராஞ்சியில் வைத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read  விருத்தாசலம் சிறையில் கைதி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவம் : வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வேல்முருகன் பரபரப்பு புகார்.

ஏற்கெனவே பலவித நோய்களுடன் இருந்த வயது முதிர்வால் தவித்து வந்த ஸ்டேன் சாமி, இந்த கொரோனா கடுங்காலத்தில் 10 மாதம் சிறையில் இருந்தார்.

அவரையும் கொரோனா பாதித்தது. பார்க்கின்ஸன் நோய் காரணமாக தண்ணீரையோ, உணவையோ கையால் எடுத்து சாப்பிட முடியாத நிலைமை.

தண்ணீர் குடிக்க ஸ்ட்ரா கேட்ட இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உடல் நலம் பாதித்த இவரை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அவர் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

திருச்சியில் பிறந்த ஸ்டேன் சாமி பிலிப்பைன்ஸில் இறையியலும், சமூகவியலும் படித்தவர்.

பிலிப்பைன்ஸில் பல மாணவர் போராட்டங்களில் பங்கெடுத்தவர். ’மாவோயிஸ்ட்’ குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆதிவாசி மக்களுக்காக தொடர்ந்து போராடி வந்தார்.

Also Read  PSBBயில் "கோயில் தீர்த்தம்" கொடுத்து அத்துமீறல் - அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்

Urban Naxal கைது ஸ்டான் சாமியுடனும் நிற்கவில்லை. 2020 ஜூலை மாதத்தில் டெல்லி யுனிவர்ட்டி ஆங்கிலத்துறை பேராசிரியர் ஹனி பாபு BK வழக்கில் 16-வது நபராக கைது செய்யப்பட்டார்.

தற்போதைய நிலையில் இதுவே இவ்வழக்கின் கடைசி கைது. சுருக்கமாக இதை ’BK-16 வழக்கு’ என்று அழைக்கின்றனர்.

இந்த வழக்கில் கைதாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்க உலக அளவில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஐ.நா. வரையிலும் வலியுறுத்தி வருகின்ற போதிலும், இந்த நிமிடம் வரை மோடி அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை.

இப்போது நாடு முழுவதும் பி கே வழக்கில் சிறையில் கைதாகி மீதமிருக்கும் 15 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒளித்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுபோதையில் 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!

Tamil Mint

இன்று முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

Tamil Mint

தில்லி, குஜராத்தில் கொரோனா நிலவரம் எல்லை மீறி செல்கிறது: உச்ச நீதிமன்றம்

Tamil Mint

வெளிநாட்டில் மருத்துவ பயின்ற 500 பேர் தமிழகத்தில் பணியாற்ற அனுமதி

sathya suganthi

இன்று தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி – உற்சாகத்தில் புத்தக பிரியர்கள்!

Jaya Thilagan

சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள் – விளையாடி கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்…!

Devaraj

விஜய் ரசிகர்கள் என்மீது கோபப்பட்டு என்ன நடக்கப் போகிறது? சீமான்

Tamil Mint

அமமுகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தேமுதிக தனித்து போட்டி?

Lekha Shree

Zomato விவகாரம்: பெண்ணுக்கு செக் வைத்த டெலிவரி பாய்! இது செம டுவிஸ்ட்!

Devaraj

பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ் தாஸ் மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார்! முழு விவரம்!

Lekha Shree

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரிஹானாவின் நாட்டுக்கு தடுப்பூசி நன்கொடை

Tamil Mint

ரூ.60,000 விலை கொண்ட கொரோனா எதிர்ப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்…!

Lekha Shree