a

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 முடிவுகள் – பின்னடைவை சந்திக்கும் நட்சத்திர வேட்பாளர்கள்!


தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. கட்சியின் முக்கிய வேட்பாளராகவும் நட்சத்திர வேட்பாளராகவும் கூறப்பட்ட பல வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.ராமு முன்னிலையில் உள்ளார்.

Also Read  சென்னை ஐஐடி-யில் 66 மாணவர்கள், நான்கு பணியாளர்கள் உட்பட 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பூ பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் எழிலன் முன்னிலையில் உள்ளார்.

அதேபோல கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு அங்கு முன்னிலை வகிக்கிறார்.

Also Read  “வாரிசு என என்னை நினைத்தால் மக்கள் நிராகரிக்கட்டும்” - உதயநிதி ஸ்டாலின்

காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி முன்னிலையில் உள்ளார்.

ராயபுரத்தில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மூர்த்தியை விட வாக்குகள் குறைவாக பெற்று பின்தங்கியுள்ளார்.

Also Read  டில்லி லோக்பாலில் புகார் - வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சிக்குமா துணை முதல்வர் ஓபிஎஸ் குடும்பம்!

கோவை தெற்கில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வேட்பாளர் வானதி சீனிவாசன் பின்தங்கியுள்ளார்.

இதேபோல் அதிமுக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், காமராஜ், பெஞ்சமின், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வி.எம்.ராஜலட்சுமி மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

BREAKING : ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்!

Bhuvaneshwari Velmurugan

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா

Tamil Mint

மு.க. அழகிரியை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்?

Lekha Shree

“நீங்க அசினை கலாய்ச்சதை விடவா தளபதி”… விஜய்யை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்களின் மீம்ஸ்…!

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

மதுரை காவலரின் மகள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை

Tamil Mint

வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை

Tamil Mint

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை செய்யப்பட்டது எதற்காக? பரபரப்பு பின்னணி

Tamil Mint

“கொரோனா 2ம் அலை சுனாமி போல் வருகிறது…!” – எச்சரிக்கும் அதிகாரி..!

Lekha Shree

பிலவ புத்தாண்டு – தமிழில் வாழ்த்துக் கூறிய பிரதமர்…!

Devaraj

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

Tamil Mint

ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம்!

Lekha Shree