அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட் திட்டம் – 51 செயற்கோள்களை விண்ணுக்கு அனுப்பவுள்ள எலான் மஸ்க்..!


அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் என்று அழைக்கப்படும் செயற்கைக்கோள் அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட் திட்டத்தின் ஒரு பகுதியாக மேலும் சில செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எலான் மஸ்க்-ன் நிறுவனம், “பூமியை சுற்றி தாழ்வான சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் தகவல் பரிமாற்றத்துக்கு தேவைப்படும் நேரத்தை கணிசமாக குறைத்து, நிறுவனங்கள் சந்தையில் தற்போது அளிக்கும் இன்டர்நெட் வேகத்தை விட பன்மடங்கு அதிக வேகத்தில் சேவையை வழங்கும்” என்று தெரிவித்துள்ளது.

Also Read  இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!

இதற்காக ஏற்கனவே 1,700க்கும் அதிகமான செயற்கைக்கோள்களை அந்நிறுவனம் விண்ணில் நிலை நிறுத்தி உள்ள நிலையில், தற்போது 51 செயற்கை கோள்களை சுமந்து கொண்டு ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கன் 9 என்ற ராக்கெட் விண்ணுக்கு செல்ல உள்ளது.

எலான் மஸ்க் தனது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு பிரபலமானவர். அவரது சமீபத்திய திட்டம் கிராமப்புற மக்களுக்கு அதிவேக இணைய சேவையை கொண்டுவருவது.

Also Read  ட்விட்டரில் இருந்து நீக்கினால் என்ன? புதிய தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ட்ரம்ப்!

ஸ்டார்லிங்க் என்பது ஒரு செயற்கைக்கோள் இணைய சேவையாகும். இது ஒரு வீட்டிற்கு ஒரு சிக்னலை அனுப்ப ஒரு செயற்கைக்கோளைப் பயன்படுத்துகிறது. முதலில், இணைய சேவை வழங்குநர் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களிலிருந்து ஃபைபர் வழியாக இணைய சிக்னல் பெறுவார். பின்னர், சிக்னல் நெட்வொர்க் செயல்பாட்டு மையம் எனப்படும் மைய இடத்திற்கு அந்த சிக்னல் நகர்த்தப்படும்.

அதைத்தொடர்ந்து இணைய நிறுவனம் அந்த இணைய சிக்னலை தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும். ஸ்டார்லிங்க் போன்ற செயற்கைக்கோள் இணைய நிறுவனத்தின் விஷயத்தில், வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட Satellite Dishகளை பயன்படுத்தி அதைப் பெறுவர்.

Also Read  கொரோனாவை அடுத்து அமெரிக்காவை அச்சுறுத்தும் இயற்கை சீற்றம்!

ஸ்டார்லிங்கின் இணையதளத்தின்படி, பீட்டா வாடிக்கையாளர்கள் 50 முதல் 150 எம்பிபிஎஸ் வேகம் வரை இணைய சேவையை பெறமுடியும். ஆனால், அதன் அமைப்பும் வேகமும் இன்னும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பொது இடத்தில் முகக்கவசம் அணியாத இளைஞருக்கு 6 வாரங்கள் சிறை..!

Lekha Shree

நாயை சித்திரவதை செய்து அதன் காலை உடைத்த இளம் பெண்! – காரணம் என்ன தெரியுமா?

Tamil Mint

“டிரம்பின் பொய் பிரச்சாரங்களால் மக்களின் வரிப்பணம் ரூ. 380 கோடி வீண்” – வாஷிங்டன் போஸ்ட்

Tamil Mint

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி – கண்களை பறிக்கும் பிரம்மாண்ட ஏற்பாடு…!

Devaraj

மீண்டும் 13 பயணிகளுடன் மாயமான ரஷ்ய விமானம்…!

Lekha Shree

தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்த ஆப்கானிஸ்தான்… மலாலா கவலை..!

suma lekha

கொரோனா: புதிய மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

Tamil Mint

மீன்களுக்காக கடலுக்குள் இறக்கப்படும் 40 காலி பஸ்…! இலங்கை அரசின் அசத்தல் திட்டம்…!

sathya suganthi

மாற்றம் ஒன்றே மாறாதது : மெக்காவில் பாதுக்காப்பு பணியில் முதல் பெண் பாதுகாவலர்

suma lekha

பத்திரிகை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உலக தலைவர்கள்…! பட்டியல் வெளியீடு…!

sathya suganthi

பனிப்பொழிவுடன் கூடிய மழை… மக்கள் அவதி..!

Lekha Shree

2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்.. அதுவும் வெறும் 75 ரூபாயில்.. ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம்..

Ramya Tamil