துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ் ஐ கைது!


சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மாதவரம் எஸ்.ஐ. சதீஷ்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மாவும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாதாவரம் பால்பண்ணை பகுதியில் கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் எஸ்.ஐ. சதீஷ்குமார்.

இவருக்கும் அதே பகுதியில் உள்ள அருள் நகர் நியாயவிலைக் கடையில் பணிபுரியும் ரேவதி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி ரேவதியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார் சதீஷ்குமார்.

Also Read  சென்னை: 74 குழந்தைகளுக்கு கொரோனா…!

இதனை கண்டித்த ரேவதியின் மகளை சதீஷ்குமார் மிரட்டியுள்ளார். ரேவதி கேட்கும் அனைத்தையும் வாங்கிம் கொடுப்பாராம் சதீஷ். ஒரு கட்டத்தில் அவர் மகளுக்கும் பரிசுப்பொருட்களை வாங்கிக் கொடுத்து வந்துள்ளார்.

ஆனால் அதனை வாங்க மகள் மறுக்கவே ரேவதி அவரை மிரட்டியுள்ளார். ஒருநாள் சதீஷ் உடன் வெளியே செல்ல வேண்டும் என்று ரேவதி வற்புறுத்த மகள் மறுத்துள்ளார்.

அதோடு தனது தந்தைக்கும் இந்த கொடுமை குறித்து சொல்லியுள்ளார். இதனால் கடுப்பான தந்தை மாதவரம் காவல்நிலையத்தில் புகாரளிக்க செல்ல, அவர்களை சதீஷ்குமார் மிரட்டியுள்ளார்.

ரேவதியின் மகள் மற்றும் மகனை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

Also Read  அரபிக்கடலில் உருவாகும் டவ்-தே புயல் - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

ரேவதியிடம் அவரின் மகள் மீது தனக்கு ஆசை உள்ளதாகவும், அதற்காக 1 லட்சம் ரூபாயும், ஐ போனும் கொடுத்துள்ளார் சதீஷ். அதை ரேவதியும் அவரது அக்காவும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

அதன்பிறகு ரேவதியின் மகள் வீட்டில் தனியாக இருக்கும் போது சதீஷ்குமார் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Also Read  சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது…!

இதற்கு அவரது தாயும் உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தனது மகளுக்கு நடந்த கொடுமை அறிந்த தந்தை மூத்த பத்திரிக்கையாளர் ஒருவருக்கு போன் செய்து சொல்லி வருந்தியுள்ளார்.

உடனே அவர்கள் உதவியுடன் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் எஸ் ஐ சதீஷ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு உதவியதாக ரேவதியும், அவரது அக்காவும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் வாரிசு அரசியலை பாஜக ஒழித்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Tamil Mint

முதல்வருக்கு ஸ்டாலின் திடீர் கடிதம்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

வேலூரில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை தொற்று…!

Lekha Shree

பெருமாளாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் நித்தியானந்தா! கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள்…முழு விவரம் இதோ…!

Devaraj

இரண்டாக பிரியும் அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

கோவை தெற்கில் கமல் தோல்வி – தன் பாணியில் ட்வீட் போட்ட பார்த்திபன்!

Lekha Shree

தமிழக முதல்வர் மீது கடும் விமர்சனங்களை தவிர்க்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Tamil Mint

தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை:வானிலை மையம் தகவல்

Tamil Mint

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்… தொடரும் பேச்சுவார்த்தை…

Tamil Mint