a

சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால்…! மும்பை தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்…!


கடந்த பி்ப்ரவரி 3 ஆம் தேதி சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷி குமார் சுக்லா ஓய்வு பெற்றப்பின், கடந்த 3 மாதங்களாக இயக்குநர் இல்லாமல் சிபிஐ அமைப்பு இயங்கி வந்தது.

இந்நிலையில் சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் முழு விவரம் இதோ…!

ஜார்க்கண்ட் மாநிலம் தான்பாத் நகரில் கடந்த 1962-ம் ஆண்டு பிறந்தவர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால். சிஎம்ஆர்ஐ பிரிவின் டி நோபிளி பள்ளியில் படித்தார். இளங்கலை பட்டமும், எம்.பி.ஏவும் முடித்த சுபோத்குமார் கடந்த 1985-ம் ஆண்டு மகாராஷ்டிரா கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார்.

2018ம் ஆண்டில் மும்பை நகரின் போலீஸ் ஆணையராகவும் சுபோத் குமார் பணியாற்றியுள்ளார்.

Also Read  கூக்கு…கூக்கு…பாடலுக்கு நடனமாடிய போலீஸ்! இணையத்தை கலக்கும் வீடியோ…!

இதற்கு முன்பு முன்பு தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவராக ஜெய்ஸ்வால் இருந்தபோதுதான், மும்பையை உலுக்கிய ரூ.20 ஆயிரம் கோடி போலி பத்திர தெல்ஜி ஊழல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்த தெல்ஜி போலி முத்திரைத்தாள் ஊழலில் ஏராளமான அதிகாரிகள் சிக்கினர்.

2006ம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்தார். அதே ஆண்டில் மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில் மாவோயிஸ்ட்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அவர்களை ஒடுக்க சிறப்பு அதிகாரியாக சுபோத்குமார் நியமிக்கப்பட்டார். சுபோத்குமாரின் சிறப்பான சேவையைப் பாராட்டி 2009ம் ஆண்டு குடியுரசுத் தலைவர் போலீஸ் விருது வழங்கப்பட்டது.

Also Read  ரெம்ட்சிவீர் தடுப்பூசியை ரூ.70,000க்கு விற்ற இளைஞர்கள் - விசாரணையில் தெரியவந்த தந்தை பாசம்…!

அதன்பின் மகாராஷ்டிரா காவல் டிஜிபியாக சுபோத்குமார் நியமிக்கப்பட்டார், 2022ம் ஆண்டுவரை சுபோத்குமார் டிஜிபியாக பதவிக்காலம் இருந்தநிலையில் மத்தியப்பணிக்கு மாற்றப்பட்டு மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சுபோத்குமார் மும்பை போலீஸ் ஆணையராக நியமிக்கப்படும் முன், மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவான “ரா” பிரிவில் ஏறக்குறைய 9 ஆண்டுகள் ஜெய்ஸ்வால் பணியாற்றியுள்ளார். அதில் 3 ஆண்டுகள் கூடுதல் செயலராக இருந்துள்ளார்.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 26.05.2021

இந்த நிலையில் பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன்சவுத்ரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய குழு ஜெய்ஸ்வால் பெயரை அடுத்த சிபிஐ இயக்குநருக்குப் பரிந்துரைத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிவனின் கையில் மதுபானம்… சர்ச்சையை கிளப்பிய இன்ஸ்டாகிராம்..!

Lekha Shree

2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசம்; அசத்திய இந்தியா!

Lekha Shree

பாரிஸ் ஒப்பந்தத்தை பின்பற்றி வரும் இந்தியா சிறப்பாக செயலாற்றுகிறது – ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

Tamil Mint

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போகிறவரா நீங்கள் ??? உங்களுக்கான செக் இதோ

Tamil Mint

வங்கி கடன்கள்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய தகவல்

Tamil Mint

ஏறுமுகத்தில் கொரோனா – வார இறுதியில் ஊரடங்கு..!

Lekha Shree

பிரசாந்த் கிஷோர் மிரட்டப்பட்டாரா…! ஐபேக்கில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு ஏன்…?

sathya suganthi

இந்திய விண்வெளித் துறையில் நுழைய ஆர்வம் காட்டும் தனியார் நிறுவனங்கள்: சிவன்

Tamil Mint

கேரள அரசின் ஓணம் பரிசு, முதல்வர் பினராய் விஜயனின் உற்சாக அறிவிப்பு

Tamil Mint

கார் பயணத்தின்போது ஓட்டுநர் தூங்கி விடுவாரோனு பயமா…! கவலை வேண்டாம்…! வந்துவிட்டது புது டெக்னிக்…!

Devaraj

சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்ற மகன் மீது தீ வைத்த தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

வாட்ஸ்அப் போலவே ‘சாய்‘… ராணுவ வீரர்களுக்காக புதிய செயலி

Tamil Mint