a

PSBB பள்ளிக்கு ஆதரவாக ட்வீட் செய்த சுப்பிரமணியன் சுவாமி…!


சென்னை கே.கே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தற்போது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Also Read  50 வருடமாக ஒரே தொகுதியில் எம்.எல்.ஏ..! அரசியல் அசுரவாதி உம்மன் சாண்டி ஓர் பார்வை…

இந்நிலையில், அப்பள்ளிக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. அதில், “10,000 மாணவர்கள் பயிலும் சென்னையில் உள்ள மரியாதைக்குரிய பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியை கியானி என்ற சமூகத்தை சேர்ந்த ஒருவரும் பிராமண சமூகத்தை சேர்ந்த ஒருவரும் நிர்வகித்து வருகின்றனர்.

அப்பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதற்காக திமுக, திகவை சேர்ந்தவர்கள் அப்பள்ளியை தாக்கி வருகின்றனர்.

Also Read  PSBB பள்ளி பாலியல் வழக்கு: கைதான ராஜகோபாலன் பரபரப்பு வாக்குமூலம்!

இந்த குண்டர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தடுத்து நிறுத்தவில்லை என்றால் நான் அப்பள்ளிக்கு அரணாக இருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக என்னை தொடர்பு கொண்டவர்களிடம் தமிழ்நாடு பாஜக என்ன செய்து கொண்டிருக்கிறது எனக் கேட்டேன். அக்கட்சி செயலற்ற நிலையில் இருப்பதாக சிலர் தன்னிடம் தெரிவித்ததாக மற்றொரு டீவீட்டில் தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அனல்காற்று வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அப்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் சூழலில் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டிருக்கும் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சக மாணவியை கர்ப்பமாக்கிய 10 ம் வகுப்பு மாணவன்…. போக்சோ கைது…

Devaraj

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Bhuvaneshwari Velmurugan

விழுப்புரத்தில் இளைஞர் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்குப் பாராட்டு.

Tamil Mint

“இன்னைக்கு 25 சீட் தான் ஆனால் நாளைக்கு”… அண்ணா அறிவாலய வாசலில் நின்று அழகிரி ஏற்ற சபதம்…!

malar

“தமிழ்கூறும் நல்லுலகம்”: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!

Lekha Shree

தமிழகத்தில் தளர்வுகள் அறிவிப்பு…!

Lekha Shree

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree

அத்தியாவசியபொருட்கள் உள்ளிட்டவற்றை தங்களுடன் வைத்துக்கொள்ள – தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை

Tamil Mint

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

புதுச்சேரியில் இன்று நோ சரக்கு டே

Tamil Mint

மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர்

Tamil Mint

9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி: முதலமைச்சர் அறிவிப்பு!

Bhuvaneshwari Velmurugan