“பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இணைக்கப்படும்” – அமைச்சர் சக்கரபாணி


தமிழக அரசு அறிவித்துள்ள 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை இணைக்க வேண்டும் என கடலூர் விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இணைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

2022ம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாமில் வாசிப்பவர்களுக்கு என 20 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது.

Also Read  சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு! - உயிரிழந்த கனகராஜுக்கு அசைன்மென்ட் கொடுத்த முக்கிய புள்ளி யார்?

அதில், பச்சரிசி வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை, உப்பு ஆகிய பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 1,088 கோடி செலவில் 2,15,48,060 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  முன்னாள் மேயர் மா சுப்ரமணியனுக்கு கொரோனா

அதைத்தொடர்ந்து அரசு அறிவித்த பொங்கல் சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் கரும்பு விடுபட்டுள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக கடலூர் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூறுகையில் கடலூர் கரும்பு விவசாயிகள், “கடந்த 2016ம் ஆண்டு முதல் அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பு இடம் பெற்று இருந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பு விடுபட்டுள்ளது கவலை அளிக்கிறது.

அரசு கொள்முதல் செய்ய ஏதுவாக கூடுதலாக கரும்பு நடவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்புகள் முற்றிலும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு தொகுப்பில் கரும்பை இணைக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

Also Read  அமைச்சர் துரைக்கண்ணு நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இணைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தேவாலயங்கள், மசூதிகளை ஆக்கிரமிக்கும் துணிச்சல் சேகர்பாபுவிற்கு உண்டா?” – ஹெச். ராஜா

Lekha Shree

தமிழகத்தில் தங்க காசு தரும் ஏடிஎம்….! எங்கு உள்ளது தெரியுமா?

Lekha Shree

பருவ மழைக்கான சாதகமான சூழல் நிலவுகிறது: வானிலை துறை

Tamil Mint

தொடரும் படுபாதகச் செயல்கள்: திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட 17 வயது மாணவி

Tamil Mint

ஓய்வு பெற உள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் பணி வழங்கக் கூடாது: தேர்தல் ஆணையம்

Tamil Mint

கேட்பாறின்றி கிடக்கும் அஸ்தி மூட்டைகள் – கொரோனா அச்சத்தால் தொடரும் அவலம்…!

sathya suganthi

உதயநிதியின் ‘கொங்கு’ பிராஜக்ட்! வானதியை டீல் செய்ய கனிமொழியை இறக்கும் திமுக!

Lekha Shree

“சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் நிறைவடையும்” – சிபிசிஐடி

Lekha Shree

தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு – காரணத்தை விளக்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…!

sathya suganthi

தொடரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் பூசல்? – போஸ்டரால் பரபரப்பு..!

Lekha Shree

டவ்-தே புயல் – 7 மாவட்டங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை

sathya suganthi

அரசு ஊழியர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துகள் மட்டுமின்றி அவர்களின் ஒட்டுமொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

Tamil Mint