Sulli Deals செயலியை உருவாக்கிய ஓம்காரேஷ்வர் தாக்கூர் கைது..!


இஸ்லாமியப் பெண்கள் பற்றி அவதூறு கருத்துகளை பதிவேற்றிய Sulli Deals செயலியை உருவாக்கிய ஓம்காரேஷ்வர் தாக்கூர் என்பவரை டெல்லி சிறப்பு போலீஸ் மத்திய பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

வடஇந்தியாவில் இஸ்லாமிய பெண்களை இழிபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தை பிரயோகம் தான் Sulli. இதை அடிப்படையாக வைத்து Sulli Deals என்ற செயலி உருவாக்கப்பட்டது.

இந்த Sulli Deals செயலி முடக்கப்பட்ட நிலையில், Bulli Bai என்ற செயலி உருவாக்கப்பட்டு சர்ச்சையானது. இந்த செயலியில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படம் பதிவேற்றப்படும். யூசர் ஒருவர் இதை லாக்இன் செய்கிறார் என்றால், அவருக்கு ஒரு இஸ்லாமிய பெண்ணின் புகைப்படம் திரையில் தோன்றும். இவர்தான் உங்களின் சுல்லி.. இவரை ஏலம் விடுங்கள் என்று கூறும்.

அந்த பெண்ணை அதே ஆப்பில் இருக்கும் மற்ற யூசர்களுக்கு இவர் ஏலம் விட வேண்டும். கேட்கவே அதிர்ச்சியாக இருக்கும் இப்படி ஒரு செயலிதான் முதலில் Sulli Deals என்ற பெயரிலும், இப்போது Bulli Bai என்ற பெயரிலும் நடத்தி வந்தனர்.

Also Read  "இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது" - உலக சுகாதார அமைப்பு

இந்த நிலையில் டெல்லியிலும், உத்தர பிரதேசத்திலும் Bulli Bai செயலி தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது.
டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் (முஸ்லிம்) தன்னுடைய புகைப்படத்தை மாற்றம் செய்து தவறான முறையில் செயலியில் பதிவிட்டுள்ளதாகக் கூறி உரிய ஆதாரங்களுடன் டெல்லி காவல்துறையில் புகார் செய்தார்.

இதையடுத்து bulli bai செயலியை உருவாக்கிய நீரஜ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். தற்போது Sulli Deals செயலியை உருவாக்கிய ஓம்காரேஷ்வர் தாக்கூர் என்பவரை டெல்லி சிறப்பு போலீஸ் மத்திய பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

Also Read  இந்தியாவிலேயே பெரிய ராகவேந்திர சுவாமி சிலை : பிறந்த நாளில் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வைரலாக போட்டோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது- மத்திய அரசு

Tamil Mint

டி20 உலகக்கோப்பை: ‘கூல் கேப்டன்’ வருகையால் ரசிகர்கள் குஷி! ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது ஏன்?

Lekha Shree

கர்நாடக மாநில புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.!

suma lekha

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

suma lekha

மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் அதிகம் – மத்திய அரசு கவலை

Shanmugapriya

பிரதமர் மோடியின் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி

Tamil Mint

உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்ற பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா…!

Lekha Shree

போட்டோஷூட் நடத்திய மணப்பெண் மீது வழக்கு… காரணம் இதுதான்..!

Lekha Shree

பணத்தை பதுக்கவே செய்யப்பட்ட பைப்புகள்…! வசமாக சிக்கிய பொறியாளர்..!

Lekha Shree

மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு நாடு தழுவிய ஊரடங்கு – காங்கிரஸ் தலைவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

பீகாரின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: பிரதமர்

Tamil Mint

ஏப்ரல் 11 முதல் 14 வரை ‘தடுப்பூசி திருவிழா’ – மத்திய அரசு திட்டம்!

Lekha Shree