கொரோனா பரவல் அதிகரிப்பு – தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு..!


தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் வகை கொரோனா மீண்டும் உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற புதிய வகை தொற்று மிக வேகமாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

Also Read  கருணாஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த டிசம்பர் 2ம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு முதன்முதலாக கண்டறியப்பட்டது. ஆனால், அசுர வேகத்தில் பரவ தொடங்கியிருக்கும் ஒமைக்ரான் தொற்றால் இதுவரை இந்தியாவில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தினசரி கொரோணா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு 1000 உயர்ந்து புதிதாக 2,730 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் நேற்று முன்தினம் 876 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அது தற்போது 1,489 ஆக அதிகரித்துள்ளது.

Also Read  கர்நாடகா: மரபணு மாற்றமடைந்த AY.4.2 வகை கொரோனா வைரஸால் 2 பேர் பாதிப்பு..!

இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் ஒமைக்ரான் வகை தொற்று பரவாமல் தடுக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்ற ஆலோசனையில் ஈடுபட்டார்.

கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவரும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனையில் முடிவில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்ட்டுள்ளதாகவும் சனி கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read  பிரபல தயாரிப்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு…!

இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லதா ரஜினிகாந்த்தின் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கெடு

Tamil Mint

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 300 பேர் கொலை.! Top List-ல் தூத்துக்குடி, மதுரை.!

mani maran

ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வில்லை: அதிகாரி விளக்கம்

Tamil Mint

தொடர்மழையால் நிரம்பி வழியும் தமிழக ஏரிகள்

Tamil Mint

“கனமழை முடிந்துவிட்டது!” – சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..!

Lekha Shree

தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்..! காவல்துறை விசாரணை..!

Lekha Shree

இன்று முதல் குறைந்த விலையில் வெங்காயங்களை விற்கும் தமிழக அரசு

Tamil Mint

சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்கள்: திறந்து வைத்தார் முதல்வர்

Tamil Mint

சென்னையில் நிரம்பிய மருத்துவமனை படுக்கைகள்! அவதியில் கொரோனா நோயாளிகள்!

Devaraj

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

suma lekha

நகராட்சி, மாநகராட்சிகளில் தனி அலுவலர் பதவிக்காலத்தை நீட்டிக்க சட்டமுன் வடிவு.

Tamil Mint

முடிந்தால் பிடித்துப்பார் முதல் காலில் விழுந்து கெஞ்சியது வரை..! நடந்தது என்ன?

Lekha Shree