ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி…Infarction நோய் தான் காரணமா?


அண்மையில் டடெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதன்பின்னர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர், குடும்பத்துடன் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தீபாவளிக்கு ரிலீசாகும் ’அண்ணாத்த’ படத்தை குடும்பத்தினருடன் பார்த்து மகிழ்ந்தது மட்டுமல்லாமல், தமது மகளின் செயலியான ஹூட் ஆப்பில் இது தொடர்பாக நெகிழ்ச்சியுடன் பதிவும் செய்திருந்தார்.

Also Read  ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினிகாந்த்…!

இந்நிலையில் நேற்று மாலை திடீரென ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாகத்தான் அனுமதிக்கப்பட்டார் என்று வதந்திகள் எழுந்த நிலையில், வழக்கமான உடல்நலன் பரிசோதனைக்குதான் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டதாக ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இதனிடையே ரஜினிகாந்துக்கு இரவு முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவான ஐ.சி.யூவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read  கொரோனாவில் இருந்து மீண்டு வந்து வாக்களித்த பிரபல இயக்குனர்…! வைரல் புகைப்படம் இதோ..!

அதாவது ரஜினிகாந்துக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எனப்படும் முழு உடல்நலன் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் ரத்த குழாய்களுக்கு போதிய ரத்தம் கிடைக்காமல் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ரஜினிகாந்துக்கு இன்பார்க்சன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது போதிய ரத்தம் கிடைக்காததால் ரத்த நாள திசுக்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனை இன்பார்க்சன் பாதிப்பு என கூறுகின்றனர். தற்போது ரஜினிகாந்துக்கு இன்பார்க்சன் பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read  ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதி காலமானார்..!

இருப்பினும் காவேரி மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படாமல் உள்ளதால் ரசிகர்கள் பதற்றத்தில் உள்ளனர். விரைவில் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பும், அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனைகளும் நடந்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மறைந்த நடிகர் விவேக்கிற்கு சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது..! விவேக் மகள் நெகிழ்ச்சி ட்வீட்..!

Lekha Shree

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் பிரபல டோலிவுட் ஹீரோ?

Lekha Shree

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக் – வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree

“அவர் நட்ட மரங்கள் கூட கண்ணீர் சிந்தும்..!” – நடிகர் விவேக் மறைவிற்கு சூரி அஞ்சலி!

Lekha Shree

“விவாகரத்து மனவலிகள் நிறைந்தது!” – பிரிவிற்கு பின் சமந்தாவின் முதல் பதிவு..!

Lekha Shree

நடக்கவே முடியாமல் போன ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்..என்ன நடந்தது?

suma lekha

விடுதலை படம் குறித்து ட்வீட் செய்த விஜய்சேதுபதி! கையில் துப்பாக்கியுடன் சூரி! சூப்பர் அப்டேட்!

Lekha Shree

ஷாருக்கானின் படத்தை இயக்குகிறாரா அட்லீ? இந்திய அளவில் ட்ரண்ட்டாகும் ஹாஸ்டேக்…!

HariHara Suthan

“அந்த அடையாளத்தை தெரியாமல் வைத்திருக்க முடியாது!” – ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்து சீமான் பேச்சு..!

Lekha Shree

பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா மரணம்… கதறி அழும் குடும்பம்… வெளியான அதிர்ச்சி ப்ரோமோ..!

Lekha Shree

சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்?

Lekha Shree

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ கவின்..!

Lekha Shree